“என் விதி இது, நான் திருப்பி கொடுக்க வேண்டும்”.. உருக்கமாக பேசிய நடிகை சமந்தா..

By Deepika

Updated on:

அறிமுகமே தேவையில்லாத நடிகை என்றால் அது சமந்தா தான். சென்னை பெண்ணான சமந்தா தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் கொடி கட்டி பறந்து வருகிறார். மாசுகோவின் காவேரி படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், நீதானே என் பொன்வசந்தம் தான் அவருக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

   

தெலுங்கு தமிழ் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் தன் முதல் பட நாயகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த சமந்தா பின் விவாகரத்து பெற்றார்.

ஆனால் தான் மயோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சில காலம் சிகிசையில் இருந்த சமந்தா தற்போது குணமாகி வருகிறார். இந்தநிலையில் வாழ்க்கை தனக்கு கற்றுக்கொடுத்த விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார் சமந்தா. அதுப்பறி அவர் பேசும்போது, ஒரு நடிகர் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும். அதில் சில கதாபாத்திரங்கள் நமக்கு பரிச்சயம் இல்லாததாக இருக்கும், அதை ஏற்று புரிந்துகொண்டு நடிக்க அனுதாபம் வேண்டும்.

அதேபோல் வாழ்க்கை எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்துள்ளது, என் விதி என்னிடம் அன்பாக உள்ளது, மக்கள் என்னிடம் அன்பாக உள்ளனர். நிறைய அன்பை பெற்று வருகிறேன், அவை அனைத்தையும் நான் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதை நான் கற்று கொண்டுள்ளேன் என மிக உருக்கமாக பேசியுள்ளார்.

author avatar
Deepika