#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அமீர். இவர் நடிகர் கார்த்திக்கை திரையுலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய திரைப்படம் தான் பருத்திவீரன். இயக்குனர் அமீர் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மட்டும் இல்லாமல் சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், பிரியாமணி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர்.
#image_title
பொதுவாக இந்த திரைப்படத்தின் கதை அம்சம் எவ்வளவு சிறந்ததாக அமைந்ததோ அதேபோல இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் தரமாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ரசிகர்களை நடனம் ஆட வைக்கும் அளவிற்கு இருந்தது. 2007ல் வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களை கவிஞர் சினேகன் எழுத்தியிருந்தார்.
காதல், ஜாதி என பக்கா கிராமத்து பின்னணியில் படம் வெளியாகி மாஸ் வெற்றி கண்டது. ஆனால் 16 ஆண்டுகளாக இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இடையே இத்திரைப்படம் தொடர்பாக மிகப்பெரிய பிரச்சனை நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. தற்பொழுது ‘பருத்தி வீரன்’ பட சர்ச்சை விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், இத்திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிய கவிஞர் சினேகன் என ஒவ்வொருவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதில் கவிஞர் சினேகன், ‘நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்’ என்று காட்டமாக ஞானவேல் ராஜாவை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், ‘ பருத்தி வீரன் படத்திற்காக அவர் இன்று வரை சம்பளமே வாங்கவில்லை என்றும், என்னால் உங்களுக்கு பணம் கொடுத்து உதவ முடியாது. உங்களுக்காக என்னால் இது மட்டும் செய்ய முடியும் என்று ஊதியமின்றி பாடல் எழுதி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் ‘ இதுதாங்க நட்பு.. என்றும் ,கஷ்டத்தில் தோள் கொடுத்து உதவிய அவரின் நட்பை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…