கல்லடி பட்டும் கண்ணதாசனுக்கு குசும்ப பார்த்தீங்களா..? வழிந்த ரத்தத்திலும் ததும்பிய காதல் கானம்..

By admin on தை 9, 2024

Spread the love

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் என்றாலே காதலும், தத்துவமும், புரட்சியும் மேலோங்கி இருக்கும். தனி ஒரு ஆளாக திரையில் கவிராஜ்ஜியம் நடத்தியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, கமல், ரஜினி என இரண்டு தலைமுறை நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை எழுதியவர். தமிழக அரசவைக் கவிஞராகவும் பதவி வகித்தவர். அர்த்தமுள்ள இந்துமதம் என்ற அமர காவியைத்தைக் கொடுத்ததுடன் அவர் ஆண்ட, அனுபவித்த அனைத்தையும் ரசனை சொட்ட சொட்ட எழுதியிருப்பவர். அதனால்தான் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று அன்றே எழுதினார்.

#image_title

ஒரு சமயம் கவிஞர் ஈ வி கே சம்பத் அவர்களுடன் தமிழ் தேசிய கட்சி கூட்டத்திற்கு சென்றார். அங்கு திடீரென கலாட்டா நடக்க கவிஞரை ஒருவன் கல்லால் தாக்கினான். உடனே இரத்தம் பீறிட்டு வர கவிஞரின் உதவியாளர் கண்ணதாசனை பத்திரமாக காருக்கு அழைத்து வந்தார். அந்த இடத்தில் இருந்து கார் கிளம்பிய பின்னர், காரில் இருந்த உதவியாளர்,“ ஐயா பேசாம இன்னைக்கு பரிசு படத்திற்கு பாட்டாவது எழுதி இருந்தால் இந்த கல்லடியில் இருந்து தப்பி இருக்கலாம், பணமாவது கிடைத்திருக்கும் என்று சொல்ல,அதற்கு உடனே கவிஞர், உதவியாளரை பார்த்து பாட்டு தானே இந்தா எழுதி கொள் என்று! பாடல் வரிகளை சொல்ல ஆரம்பித்தார்.

   
   

அப்பாவின் ஆசையை நிறைவேற்றி வரும் நடிகர் மகன்… டாக்டராக இத்தனை பேருக்கு வெளிச்சம் காட்டியவரா?

 

” கல்லால் அடித்த அடி வலிக்க வில்லை
அந்த காயத்தில் உடல் துடிக்க வில்லை
என்று சொன்னார்!

அதிர்ச்சி அடைந்த உதவியாளர், “ஐயா இது காதல் பாட்டு.. நீங்க என்னடா என்றால் கல், அடி என்று சொன்னால் எப்படி என்று சொல்ல, சரி இப்ப காதல் பாட்டிற்கான வரிகள் சொல்கிறேன் எழுதி கொள் என்று சொல்ல ஆரம்பித்தார்.

#image_title

அந்த பாட்டு தான் பின்னாளில் ஹிட் ஆன

நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதுடி அந்த காயத்தில் மனசு துடிக்குதுதடி..

என்ன என்ன நினைக்குது ஏதேதோ நினைக்குது

வண்ண வண்ண தோட்டங்கள் அஞ்சு ரூபாய்,

உன்னை வட்டமிட்டு போகுது அஞ்சு ரூபாய்..

என்ற பாடல். வடிவேலுவின் புகழ்பெற்ற வசனமான இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பா என்ற பாணியில் கல்லடி பட்டு ரத்தம் வழிந்த வேளையிலும் கவிஞரின் காதல் ரசம் மட்டும் குறையவே இல்லை.