சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜகுமாரன் இயக்கத்தில் 2001-ல் வெளியான படம்தான் விண்ணுக்கும் மண்ணுக்கும். சரத்குமார்-குஷ்பு, விக்ரம்-தேவயானி நடித்த இப்படம் அப்போது வெளியாகி வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நட்சத்திர தம்பதிகள் உருவாகக் காரணமாக இருந்தது. இப்படத்தில் நடித்த போது தேவயானிக்கும், இயக்குநர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர இத்தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்.

#image_title
தற்போது இயக்குநர் ராஜகுமாரன் விக்ரமின் நடிப்பை விமர்சித்துப் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. விக்ரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் நடித்தபோது எனக்கும் அவருக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் படம் முடிந்த பிறகு இந்தப் படம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். எதற்காக அவர் இப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை.

#image_title
ஆனால் விக்ரமை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போய் சேர்த்ததே விண்ணுக்கும் மண்ணுக்கும் படம்தான். கையை ஒடித்துக்கொண்டு, காலை ஒடித்துக் கொண்டு, கண்ணை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு நடிப்பது எல்லாம் நடிப்பு இல்லை. இருக்கும் க்ளோசப்பில் எதுவுமே இல்லாமல் கட் சொல்லும் வரை நடிக்க வேண்டும். விக்ரமால் அப்படி நடிக்கவே முடியாது.
கல்லடி பட்டும் கண்ணதாசனுக்கு குசும்ப பார்த்தீங்களா? வழிந்த ரத்தத்தலும் ததும்பிய காதல் கானம்
மேலும் அவர் கூறியபோது, “விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டேன். ஒன்று கமல் ஹாசன் மாதிரி நடிப்பார் இல்லை ரஜினிகாந்த் மாதிரி நடிப்பார். இதைத் தாண்டி அவருக்கு ஒரு நடிப்பும் தெரியாது. இந்த இரண்டையும் தாண்டி விக்ரம் நடித்தார் என்று பார்த்தீர்கள் என்றால் மீசையை எடுத்துக் கொண்டு, மொட்டை அடித்துக்கொண்டு, காலை உடைத்துக்கொண்டு, கையை உடைத்துக்கொண்டு நடந்து போக சொன்னால் நடந்து போவார்.

#image_title
ஆனால் மேக்கப்பே இல்லாமல் நின்ற இடத்தில் கட் சொல்லும் வரைக்கும் ஒரு நடிகராக என்ன ரியாக்ஷன் என்ன கொடுக்க வேண்டும் என்று விக்ரமுக்கு சுத்தமாக தெரியாது. எனது படத்தில் அவருக்கு அப்படியொரு பிரச்னை இருந்தது” என்றார். இயக்குநர் ராஜகுமரானின் இந்தப் பேச்சுக்கு சீயான் விக்ரம் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவே போற்றும்படி நடிப்பில் தேசிய விருது வாங்கிய விக்ரமுக்கா நடிக்கத் தெரியாது தேவையில்லாமல் ஏதேனும் மனதில் வைத்துப் பேசுகிறாரா என ராஜகுமாரனுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் விக்ரம் ரசிகர்கள்.

#image_title
