கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கஸ்தூரி, “சமீப காலமாக எனக்கு நடந்த சம்பவங்கள் கோபத்தை அதிகப்படுத்தியது. அதற்கு குரல் கொடுக்கும் போது ஆளும் கட்சி தரப்பில் இருந்து கொச்சையாக பேசினார்கள். அநீதிக்கும், அநியாயத்திற்கும் நம் குரல் கொடுக்கும் போது நடுநிலையாக இருந்தாலும் திமுக எதிர்ப்பு பாஜக தான் என்பதை தலையில் அவர்கள் ஏற்றி விட்டார்கள் .
அதை தொடர்ந்து பாஜகவில் இணைந்து விட்டேன். ஒருமுறை சிறை சென்றேன். இதற்கு மேல் பயப்பட எதுவும் இல்லை. ஜாதி ரீதியாக ஒரு ஆணவக் கொலையை தமிழகம் சந்தித்தது. சமத்துவம், சமூக நீதி என்று பேசுவோர் யாரும் வாய் திறக்கவில்லை. நடிகராக விஜய் எனக்கு பிடிக்கும். அந்த விவகாரத்தில் கூட அவர் வாய் திறக்கவில்லை. மோடி தலைமையில் அவர் எங்கே போக சொன்னாலும் போவேன் என்று கூறியுள்ளார்.
