திடீர் திருப்பம்..! அன்புமணியுடன் சமாதானம்…? ஆனால் என்ன நடந்தது தெரியுமா..? ராமதாஸ் பரபரப்பு பேட்டி..!!

By Soundarya on ஆவணி 16, 2025

Spread the love

பாமக தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் தனது தாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்திப்பதற்காக குடும்பத்தோடு தைலாபுரத்துக்கு நேற்று இரவு அன்புமணி சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த கேட் வெட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது ராமதாஸும் உடன் இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்புமணியில் மற்றும் ராமதாஸ் இணைந்து எடுத்த புகைப்படம் பாமகவினரை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக பரப்பப்படும் தகவல் பொய்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் அவர், “அன்புமணி  தைலாபுரத்தில் என்னை பார்த்தபோது வணக்கம் வைத்தார். நானும் வணக்கம் வைத்தேன். தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த அன்புமணியிடம் நான் எதுவும் பேசவில்லை” என்று கூறியுள்ளார்