பத்மஸ்ரீ விருது வாங்கிய முன்னாள் நீச்சல் வீராங்கனை வீட்டில் இருந்த பதக்கங்கள், நினைவு பரிசுகள் திருடு போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை புலா சௌத்ரி ஐந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல்களிலும் நீந்தி கடந்தவர் என்று பெருமையைப் பெற்றவர். இவருடைய சாதனையை பாராட்டி மத்திய அரசு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 2006 ஆம் வருடம் முதல் 2011 வரை மேற்குவங்க மாநிலம் நந்தபுரி எம்எல்ஏவாக இருந்தார்.
தற்போது கோலகட்டாவில் உள்ள கஸ்பா பகுதியில் புலா சவுத்ரியின் பரம்பரை வீடு உள்ளது. இந்த வீட்டை இவருடைய சகோதரர் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று இவருடைய சகோதரரான மிலன் சௌத்ரி அந்த வீட்டை சுத்தம் செய்ய சென்றுள்ளார் . வீட்டில் உள்ளே நுழைந்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. வீட்டில் இருந்த அவருடைய ஏராளமான புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசுகள் திருடு போயியுள்ளது. மேலும் தங்கப்பதக்கங்கள், பத்மஸ்ரீ விருது என அனைத்தையுமே மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். இதனை அடுத்து தற்போது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது இவருடைய வீட்டில் நடக்கும் மூன்றாவது திருட்டு சம்பவம் இது.
