முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் உங்களுக்கும் ரூ.30 லட்சம் கிடைக்கும்… எப்படி பயன்பெறுவது?.. இதோ முழு விபரம்…!

By Srimathi on ஆவணி 16, 2025

Spread the love

“முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில்”, ரூ. 5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கு, இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் சிகிச்சைக்கு நிதி தேவைப்பட்டால், முதலமைச்சருக்கு மனு அளிப்பதன் மூலம் ரூ. 30 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும். இத்திட்டத்தில் அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை போன்ற சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ. 1,20,000 கீழ் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். இத்திட்டத்தை உபயோகிக்க, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை மிகவும் அவசியம்.

இதேபோல் மத்திய அரசின் “பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய யோஜனா திட்டம்” செயல்பட்டு வருகிறது. இவ்விரண்டு திட்டத்திலும் இணைந்து, ஒரு குடும்பம் சராசரியாக 5 வருடத்திற்கு ரூ. 10 லட்சம் மருத்துவ காப்பீடாக பெற முடியும். சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல், சிகிச்சை முறைகள், தொடர் சிகிச்சை வழிமுறைகள், பரிசோதனை முறைகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் போன்றவை ஒவ்வொரு வருடத்திற்கும் திருத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இத்திட்டத்தில் இணைய ரேஷன் கார்டு நகல், குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்று அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது “உங்களுடன் ஸ்டாலின்” முகம் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

   

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வர் காப்பீடு திட்டத்தின் பயன்களை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார்.