கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் கட்சியின் நிர்வாகிகளான ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை எப்படி சட்டரீதியாக கையாளுவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் நாணயத்திற்கு தமிழக அரசு கெடு விதித்துள்ளது. 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது சம்பவ பகுதியை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முழு வீச்சில் விசாரணை நடைபெற்ற வருகிறது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
