விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தை சேர்ந்த சங்கர் (45) என்பவர் கரும்பு வெட்டும் கூடி தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு இருவேல் பட்டை பகுதியை சேர்ந்த அன்பு(39) என்ற சரத்குமார் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில் சங்கர் தனது மனைவி அஞ்சு லட்சமியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். தனது சொந்த ஊரான மரகதபுரத்தை சேர்ந்த பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ள காதலியை தனது நண்பனான அன்புக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அன்புவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கள்ளக்காதல் மலர்ந்து உள்ளது.
இதனால் ஷங்கரை அந்த பெண் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் கள்ளக்காதலியை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனை கள்ளக்காதலி அன்பு விடம் கூறியதும் நேற்று முன்தினம் அது போதையில் சங்கரிடம் அவர் தகராறு செய்துள்ளார். மது போதையில் சங்கரை பல இடங்களில் தாக்கிய அவர் பிறப்புறுப்பின் ஒரு பகுதியையும் எடுத்துள்ளார். மேலும் வலது கண்ணை தோன்றியுள்ளார். பிறகு உடலை மரகதபுரம் வாய்க்கால் மேடு பகுதியில் தூக்கி எறிந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடி வந்த ஷங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரித்தனர். விசாரணையில் தனது சொந்த நண்பரால் இவ்வாறு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சங்கர் மனைவி அஞ்சு லட்சமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புவை தேடி வருகிறார்கள். மேலும் இந்த கொலைகளுக்கு தூண்டுதலாக இருந்த கள்ளக்காதலையையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பல காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் சங்கருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
