அடுத்த பரபரப்பு…. 39 பேர் மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட சதி… நீதிபதியிடம் தவெக மனு…. நாளை அவசர விசாரணை…!

By Nanthini on புரட்டாதி 28, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் குழந்தைகள் உள்பட  39 பேர் உயிரிழந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

   

இதனிடையே விபத்து தொடர்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ல தான் வெற்றிக் கழகம் சார்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து கரூர் சம்பவம் தொடர்பாக கட்சியினர் ஆலோசனை நடத்தும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அவரது இல்லத்தில் சந்தித்து நீதிமன்றம் தாமாக முன்வந்த சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிசிடிவி கேமராக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து முடிவு செய்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என…