கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். தமிழக அரசும் அறிவித்துள்ளது. தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
”இனிமே இப்படி ஒரு துயர சம்பவம் எந்த ஊர்லயும் நடக்கக் கூடாது.. முன்னுதாரணமா கரூரை எடுத்துக்கோங்க… எங்களோட போகட்டும், நாங்களே அழுது தீர்த்துகுறோம்…” கரூர் வியர் பிரச்சார கூட்ட விபத்து… ஆதங்கத்தை வெளிபடுத்திய நபர்….!#Death | #Karur | #Namakkal | #TVKVijay | #TVK |… pic.twitter.com/OQhvseR2lB
— Polimer News (@polimernews) September 28, 2025
இந்நிலையில் இந்த உயிரிழப்பு குறித்து கரூர் மக்கள் தங்களின் ஆதங்கத்தைவெளிப்படுத்தியுள்ளார் . அதாவது, இனிமே இப்படி ஒரு துயர சம்பவம் எந்த ஊர்லயும் நடக்கக் கூடாது.. முன்னுதாரணமா கரூரை எடுத்துக்கோங்க.. எங்களோட போகட்டும், நாங்களே அழுது தீர்த்துகுறோம். உங்களோட அரசியல் லாபத்திற்காக மக்கள் உயிரை எடுக்காதீங்க. இதுல எதோ சதி இருக்கு. பாதுகாப்பு கொடுக்க்காதது அரசோடு தப்பு. இந்த மக்களை யாரு காப்பாத்துவா..? இது ஆறாவது மாவட்டத்திற்கு தானே இங்கே வந்தார். அப்போ மக்கள் கூட்டம் கூடுவாங்கன்னு தெரியாதா? நாமக்கல் மாவட்டத்திலேயே எவ்ளோ மக்கள் மயக்கம் போட்ருக்காங்க அப்பவே தெரியாதா? மக்களை காப்பாத்த தெரியாத உங்கள் கையில் எதுக்கு ஆட்சி அதிகாரம்?” என்றுபேசியுள்ளார்.
