Categories: சினிமா

சினிமா நல்லா இல்லைன்னு நீங்க சொல்லக் கூடாது… இப்படி பேச தில்லு வேண்டும்.. அப்படி பேசுபவரை இயக்குனராக்க அதைவிட தில்லு வேணும்!

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரு துறைகளில் தனி முத்திரைப் பதித்தவர் கரு பழனியப்பன். அதை எல்லாம் விட அவரை வெகுஜனத்திடம் கொண்டு சேர்ததது அவரின் சுவாரஸ்யமான பேச்சாற்றல்தான். எந்த ஒரு விஷயத்தையும் கேட்பவர்களைக் கட்டிப்போடும் அளவுக்கு பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் கரு பழனியப்பன்.

அவர் தமிழ் சினிமாவில் பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கரு பழனியப்பன். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களான சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் ஆகிய படங்கள் அவருக்கு என்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத்தந்தன.

அதன் பின்னர் அவர் மந்திரப் புன்னகை என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதன் பின்னர் அவர் சினிமா வாழ்க்கையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் இயக்கிய நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை.

இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அவர் பணியாற்றி வருகிறார்.  ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா ,இந்த நிகழ்ச்சி நீயா நானா போல ஒரு விவாத நிகழ்ச்சியாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘நேர்ப்பட பேசு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தனக்கு சத்யஜோதி நிறுவனத்தில் எப்படி படம் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது எனப் பேசியுள்ளார். அதில் “எனக்கு சத்யஜோதி தியாகராஜன் சாரை மிகவும் பிடிக்கும். அவரிடம் நான் ஒரு நண்பர் போல பேசிக்கொண்டிருப்பேன். நான் இயக்குனர் ஆவதற்கு முன்பும் என்னை மரியாதையுடன் நடத்தியவர் அவர்.

ஒரு நாள் நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘இப்போது சினிமா சரியில்லை’ என்றார். ‘அதை நீங்க சொல்லாதீங்க. ஏன் என்றால் நீங்க இப்ப படமே எடுப்பதில்லை’ என்றேன்.  நான் எவ்வளவு படம் எடுத்திருக்கிறேன் தெரியுமா?’ என்று கேட்டார். நான் ‘அதெல்லாம் இருக்கட்டும் இப்போது படம் எடுக்கிறீர்களா?’ உடனே ‘அப்படியா? நான் ஒரு படம் எடுக்கிறேன். நீ இயக்கு” என்றார். அப்படிதான் ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் தொடங்கியது.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

3 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

20 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

39 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

50 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago