அடுத்த விக்கெட் காலி..! அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்த கரு.நாகராஜன்… சரியும் பாஜக கோட்டை… தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்..!

By Soundarya on ஆனி 6, 2026

Spread the love

பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த கரு.நாகராஜன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக பாஜகவில் இருந்து அண்மையில் விலகி, ‘புதிய இயக்கம்’ ஒன்றை தொடங்கியுள்ள முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் புதிய முயற்சிக்கு ஒரு வலுவான அணியாக இருந்து முழு ஒத்துழைப்பையும், உதவியையும் வழங்கப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், அண்ணாமலை தனது புதிய இயக்கத்தை இன்று மதியம் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இயக்கம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்களும் ஆதரவாளர்களும் மிகத் தீவிரமாகப் பதிவு செய்யத் தொடங்கினர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக இந்தத் தொடக்கம் பார்க்கப்படுகிறது.

   

இயக்கம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே 7,75,000-க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அசுர வேக சேர்க்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள பெரும் வரவேற்பையும் காட்டுகிறது.