திடீர் பரபரப்பு..! 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது… தில் இருந்தா ஜெயிச்சு காட்டுங்க.. உதயநிதிக்கு நேரடி சவால் விடுத்த ஆதவ் அர்ஜுனா..!!

By Soundarya on ஆனி 6, 2026

Spread the love

இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது தில் இருந்தால் ஜெயித்துக் காட்டுங்கள் என்று திமுகவிற்கு ஆதவ் அர்ஜுனா அதிரடியாக சவால் விடுத்துள்ளார். ஆர்.கே. நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ பல்லவியை நீங்கள் எப்போது அவமானப்படுத்தினீர்களோ, அப்போதே நாங்கள் தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு நடந்த அவமரியாதைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் களம் அமையும் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

   

இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு நேரடி சவாலாகவே விடுகிறேன் என்றும் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக முழங்கியுள்ளார். இவரின் இந்த அதிரடி பேச்சு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.