அந்த படத்துக்காக 21 பாட்டு Compose பண்ணன், ஆனா 6 பாட்டு தான் Choose பண்ணாங்க.. இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா பகிர்ந்த சுவாரசியம்..

By Archana

Updated on:

முன்னனி இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் பல சூப்பர் டூப்பர் பாடல்களை கொடுத்த சில இசைமைப்பாளர்களை நாம் மறந்து போயிருப்போம். அப்படியான ஒரு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. என்ன தான் இளையராஜாவின் குடும்பம் என்றாலும் கூட, தனக்கான தனி டிராக்கை உருவாக்கி இருந்தார் கார்த்திக் ராஜா. இசை பேரரசரான தந்தையின் மரபுகளையும், இளவரசரான தம்பியின் நவீனத்தையும் ஒருசேர ஒருங்கமைக்கும் திறன் கொண்ட கார்த்திக் ராஜாவின் இசை தெளிந்த நீரோடைப் போல தனித்துவம் பெற்றவை.

DVb7yd VMAA0dzv

குறிப்பாக 90-களின் பிற்பகுதியில் வெளியான உழைப்பாளி, பொன்னுமணி, தர்மசீலன், சர்க்கரைதேவன், அமைதிப்படை, ராசாமகன், உள்ளிட்ட படங்களுக்கு இசை இளையராஜா என்றாலும், பின்னணி இசையமைத்தவர் கார்த்திக் ராஜாதான். அதோடு மட்டுமின்றி, பாண்டியன், ஆத்மா, கண்மணி உள்ளிட்ட இளையராஜா இசையில் வந்த படங்களில் தலா ஒரு பாடலையும் கார்த்திக் ராஜா கம்போஸ் செய்துள்ளார். அதில் பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா” கிளாஸிக் ரகம்.

   
xl image 16 9 airtel 1697649744

சில ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்த வாஞ்சிநாதன், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும் படங்களில், வாஞ்சிநாதன் தவிர இரண்டு படங்களுமே மியூசிக்கல் ஹிட். குறிப்பாக ‘கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா, ரகசியமாய் ரகசியமாய்’ பாடல்கள் மறக்கமுடியாதவை. இதே வரிசையில் வந்த ஆல்பம் படத்தின் செல்லமே செல்லம் என்றாயடி பாடலை 2கே கிட்ஸ்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். டும் டும் டும் படத்திற்காக சுமார் 21 டியூன்களை தயார் செய்து கேசட்டுகளில் பதிவு செய்துக் கொண்டாராம் கார்த்திக் ராஜா.

561784

முதல் 6 டியூன்களை பாட்டாக தயார் செய்த பிறகு மீதமுள்ள டியூன்களை என்ன செய்வதென்று யோசித்தப் போது இயக்குநர் பெருமாள் அனைத்தையும் ரீ ரெக்கார்டிங்கில் பயன்படுத்த சொன்னாராம். ஒவ்வொரு சீனுக்கும் கார்த்திக் ராஜா இசையமைத்த டியூன்களை பயன்படுத்தி ஒவ்வொரு சீனையும் செதுக்கி இருக்கிறார் இயக்குநர் பெருமாள்.

author avatar
Archana