அஜித்தால் அவமானப்படுத்தப்பட்ட வெங்கட்பிரபு.. GOAT படத்துக்கு இரவு பகலா உழைக்க காரணம் இது தானா.. இதென்ன புதுக்கதையா இருக்கு?

By Sumathi on ஜனவரி 24, 2024

Spread the love

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட்பிரபு, துவக்கத்தில் சில படங்களில் நடித்தார். ஏப்ரல் மாதத்தில், சிவகாசி போன்ற படங்களில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தனது நண்பர்களுடன் இணைந்து, சென்னை லோக்கல் ஏரியா பசங்களின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக வைத்து சென்னை 28 படத்தை எடுத்தார்.

அடுத்து, ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டார். இதையடுத்து மங்காத்தா, கோவா, மாநாடு சென்னை 28 2ம் பாகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இப்போது, நடிகர் விஜய் நடிப்பில் கோட் ( கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்) படத்தை இயக்கி வருகிறார்.

   

   

இந்நிலையில், சமீபத்தில் விமானம் ஒன்றில் இசையமைப்பாளர் யுவனமும், வெங்கட்பிரபுவும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இது கோட் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களுக்காக அவர்கள் இருவரும் லண்டன் சென்று அங்குள்ள ஒலிப்பதிவு கூடத்தில் பாடல்களை ரெக்கார்டு செய்ய சென்றதாக தெரிய வந்துள்ளது. இப்படி கோட் படம் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தை மிகப்பெரிய மாஸ் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ஹீரோ விஜயை விட, இயக்குநர் வெங்கட்பிரபு அதிக தீவிரமாக இருக்கிறார். இரவு பகல் பாராமல், கடுமையாக வேலை செய்கிறார்.

 

இதுவரை இயக்கிய மற்ற படங்களில் எல்லாம் ஜாலியாக படப்பிடிப்பை நடத்திக்கொண்டு இருந்த வெங்கட்பிரபு இந்த படத்தில் இவ்வளவு சின்சியாரிட்டி, ஹார்டு ஒர்க் செய்ய காரணம், நடிகர் அஜீத்குமார் என்று தெரிய வந்துள்ளது. அவரை வைத்து மங்காத்தா என்ற ஹிட் படத்தை கொடுத்தார் வெங்கட்பிரபு. அதன்பிறகு அஜீத், தனது படத்தை இயக்க வெங்கட்பிரபுவை அழைக்கவில்லை.

ஆனால் மற்ற இயக்குநர்களுக்கு தன்னை வைத்து 2, 3 படங்கள் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அதுமட்டுமின்றி வெங்கட்பிரபு பலமுறை போன் செய்தும் அஜீத்குமார் எடுக்காமல் இன்சல்ட் செய்துள்ளார். அதனால், கோட் படத்தை மிகப்பெரிய அளவில் தந்து அஜீத்குமாரே தன்னை அழைத்து, அவரை இயக்கும் வாய்ப்பை தர வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறார் வெங்கட்பிரபு. அதனால் தனது முழு உழைப்பையும் கொட்டி விஜய் படத்தை உருவாக்கி வருவது தெரிய வந்துள்ளது.