சிம்பிளாக வளைகாப்பு விழாவை நடத்திய நடிகை ஸ்ரீதேவி அசோக்.. மொத்தமாக கலந்துகொண்ட சீரியல் குழுவினர்.. வைரலாகும் வீடியோ..

By Priya Ram

Updated on:

பிரபல நடிகை ஸ்ரீதேவி அசோக் ஒரு சில படங்களிலும் ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் ஸ்ரீதேவி அசோக் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்படத்தை தொடங்கினார்.

   

இதனையடுத்து கடந்த 26 ஆம் ஆண்டு வெளியான கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் ஸ்ரீதேவி அசோக் நடித்தார்.

அதன் பிறகு தங்கம், இளவரசி, சிவசங்கரி, ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என அடுத்தடுத்த வெற்றி சீரியல்களில் ஸ்ரீதேவி அசோக் நடித்துள்ளார். இவருக்கு அசோக் சிந்தாளா என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இரண்டாவது முறையாக கர்ப்பமான ஸ்ரீதேவி அசோக்கிற்கு ஐந்தாம் மாத வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி தனது கணவருடன் இணைந்து நடனமாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Priya Ram