கார்த்தி மேல் வழக்கு பதிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற காவல்துறை.. விதிக்கப்பட்ட அபராதம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By Ranjith Kumar on பங்குனி 7, 2024

Spread the love

ராஜ்முருகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த கார்த்தி 25 வது படமான ஜப்பான் படம் பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் படம் வெளியாகி மாபெரும் தோல்வியை கண்டது, கார்த்தியின் பருத்திவீரன் படம் வெளியானதில் இருந்து கார்த்தி கவனிக்க கூடிய நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருந்தார்.

அதனால் கார்த்தியின் வரும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர் கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது, பிரபல நடிகர்களின் படம் போல் இவர் படத்தையும் மிக ஆரவாரத்துடன் வரவேற்று வந்தார்கள். அதேபோல் கார்த்தியின் 25 வது படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்த ரசிகர்கள் மத்தியில் படம் வெளியான பின் படத்தின் ஸ்கிரீன் பிளே சொதப்பி இருப்பதை பார்த்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். அதன் பின்னதாக பிரபல இயக்குனர் பிரேம்குமார் அவர்களின் இயக்கத்தில் தற்போது கார்த்தி அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் அபிசியால அப்டேட் இதுவரை வரவில்லை, இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று தெரிவித்து இருந்தார்கள். இந்த சமயத்தில் கார்த்தி தனியார் நிகழ்ச்சி பேட்டி ஒன்றில் தான் அமெரிக்காவில் படித்த பொழுது நடந்த சில விஷயங்களைப் பற்றி பகிர்ந்து இருந்தார். அதாவது, USA-வில் படிப்பதற்காக அங்கு தங்கி இருந்த சமயத்தில் தன் நண்பர்களுடன் இரண்டு கார்களில் சென்றிருக்கிறார்,

   

அதில் கார்த்தியின் நண்பர் ஒரு காரை வேகமாக அழுத்தி செல்ல, கார்த்தி இருந்த காரும் அந்த காரை ஓவர் டெக் செய்துள்ளது. அதனால் விதி மீறல் செய்துள்ளார்கள் என்று, அமெரிக்காவில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் 135 டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளார்கள். என்று, இதை கார்த்தி அவர்களே தனியார் சேனல் இன்டர்வியூ இல் ஓபன் ஆக பேசியுள்ளார்.