38 வயதில் 4-வது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்…

By Begam

Published on:

‘வொண்டர் வுமன்’ படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர்  நடிகை கேல் கெடாட். ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படமும் அவருக்கு பல பட வாய்ப்புகளை அளித்தது. இஸ்ரேல் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை கேல் கெடாட்.  மாடலிங்கில் அதிக விருப்பமுடையவர்.

   

தனது 18ஆவது வயதில் ‘மிஸ் இஸ்ரேல்’ பட்டத்தை பெற்றார். இதன்மூலம் பிரபலமான அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.தற்போது கேல் கடோட்டின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 331 கோடி என்று கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் கேல் கடோட், 2019ல்  Pilot Wave எனும் நிறுவனத்தை தொடங்கி தற்பொழுது வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ஹாலிவுட்டின் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டிருந்த  இவர் 2008ல் ஜான் வர்சானோ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு  அல்மா,  மாயா, டேனியாலா என்று மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில்  மீண்டும் கர்ப்பமான அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அக்குழந்தைக்கு ஓரி என்று பெயர் வைத்திருக்கிறார். ஓரி என்றால் ஹிப்ரு மொழியில் எனது ‘ஒளி’ என்று அர்த்தம்.  இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும், திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)