‘அவ குடும்பத்தை ரெண்டாக பிரிக்கிறவ இல்ல’.. முதல் மனைவியுடன் விவாகரத்தான நிலையில் சிம்பு பட நடிகையுடன் காதலில் விழுந்த நடிகர்..

By Begam

Updated on:

விஜே வாக களமிறங்கி மக்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் படவாய்ப்புகள் கிடைத்தவர்கள் பலர் உள்ளனர். அப்படி  SS மியூசிக் சேனலில் விஜேவாக பணியாற்றி ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் விஜே லேகா வாஷிங்டன். SS மியூசிக்கில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவருக்கு  சினிமா வாய்ப்புகளும் குவிந்தது. தமிழ் தெலுங்கு என்று பலர் மொழிகளில் இவர் நடித்தார். தமிழில் ஜெயம்கொண்டான், உன்னாலே உன்னாலே, கல்யாணம் சமையல் சாதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

   

தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் ‘ Peter gaya kaam se’ என்ற படத்தில்  நடித்திருந்தார்.ஆனால், அந்த படம் சில பல காரணங்களால் வெளியாகவில்லை. தமிழில் நடிகை லேகா, சிம்புவுடன் ‘கெட்டவன்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படமும்வெளியாகவில்லை. பலவருடங்களாகவே இவர் என்ன செய்கிறார்? என்ன ஆனார் ? என்ற தகவல் யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்பொழுது இவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது லேகா வாஷிங்டன் தற்போது பாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்து வருகிறாராம்.  ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ‘ டெல்லி பெல்லி’ பட  பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தானை தான் நடிகை லேகா வாஷிங்டன்  தற்பொழுது காதலித்து வருகிறார்.  இவர் ஏற்கெனவே 2011ல் அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்து,  2019ல் விவாகரத்து செய்துள்ளார்.

சமீபத்தில்’ இம்ரான் கான் தனது மனைவி அவந்திகாவை பிரிய காரணமே லேகா வாஷிங்டன் தான், எனவும் லேகா வாஷிங்டன் குடும்பத்தை பிரிக்க வந்தவர்’ எனவும் சர்ச்சைகளில் சிக்கினார். இதற்கு பதிலளித்த இம்ரான் கான் ‘ லேகா வாஷிங்டனும் நானும் நண்பர்களாக பழகி பின்னர் காதலிக்க ஆரம்பித்தோம். அவர் ஒன்றும் குடும்பத்தை பிரிக்க வந்தவர் கிடையாது’ என கூறியிருந்தார். தற்பொழுது நடிகை லேகா லேகா வாஷிங்டனின் சமீபத்திய  புகைப்படம் இணையத்தில்வெளியாகி வைரலாகி வருகிறது.