“தமிழ்நாட்டிற்கு வந்தது காவிரி நீர் இல்லை”…. சௌமியா அன்புமணி கூறிய பகீர் உண்மை…. காவிரி விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகளைத் துளியும் மதிக்காமல் செயல்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது தமிழகத்திற்குத் திறந்துவிடப்படும் காவிரி நீர், கர்நாடகாவின் நல்லெண்ணத்தால் வழங்கப்பட்டது அல்ல; மாறாக, கேரளாவில் பெய்த அதீத மழையின் காரணமாக கபினி அணை முழுமையாக நிரம்பியதால், வேறு வழியின்றி வெளியேற்றப்பட்ட உபரி நீரே ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இயற்கையின் பெருமழையால் கேரளாவிலிருந்து வரும் தண்ணீர் மட்டுமே, வேறு வழியின்றிக் கர்நாடகா வழியாகத் தமிழகத்தை வந்தடைந்துள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரத்தில் தமிழக உரிமையை நிலைநாட்ட, மாநில அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, தேவையான சட்டப்பூர்வமான முன்னெடுப்புகளை உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாது அணையானது தமிழக எல்லையிலிருந்து வெறும் நான்கு கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே அமையவுள்ளது என எச்சரித்த அவர், எதிர்காலத்தில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வந்துவிடக் கூடாது என்ற வஞ்சக எண்ணத்துடனேயே தமிழக எல்லைக்கு மிக அருகில் இந்த அணையைக் கட்ட கர்நாடகா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.