Categories: சினிமா

கண்ணதாசனை நடுத்தெருவில் நிறுத்திய சந்திரபாபு… ஆனாலும் கவியரசர் செய்தது தான் ஹைலைட்..

Spread the love

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது  அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர் என்பதுதான். சந்திரபாபு வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது, நடனமாடுவது, படத்தை இயக்குவது என பல துறைகளிலும் ஜொலித்தவர்.

வெற்றிகரமான நடிகராக வலம் வந்த சந்திரபாபு, தன்னுடைய 50 வயதுக்குள்ளாகவே அகால மரணமடைந்தார். அதற்கு அவரின் மோசமான குடிப்பழக்கமே காரணம் என்று சொல்லப்படுகிறது. சந்திரபாபு நகைச்சுவை நடிகராக மக்களை சிரிக்க வைத்தாலும், அவர் வாழ்வில் அவர் சந்தித்தது பெரும்பாலும் சோகங்களே. அவர் திருமணம் செய்த பெண், வேறு ஒருவரை காதலிப்பதாக சொன்னதால் அவரை பிரிந்தவர் சந்திரபாபு.

இதனால் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் சந்திரபாபுவை கதாநாயகனாக வைத்து கவிஞர் கண்ணதாசன் ‘கவலையில்லாத மனிதன்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். ஆனால் அந்த படத்தில் ஒழுங்காக நடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார் சந்திரபாபு. இதனால் அந்த படம் தாமதமாகி இறுதியில் ரிலீஸ் ஆகி தோல்வி படமாக அமைந்தது. கவலை இல்லாத மனிதன் படத்தை எடுத்து நான் கவலை உள்ள மனிதனாக மாறினேன் என கண்ணதாசன் புலம்பியுள்ளார்.

அதனால் கண்ணதாசனுக்கும் சந்திரபாபுவுக்கும் இடையே இருந்த நட்பில் விரிசல் விழுந்துள்ளது. ஆனாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் சந்திரபாபு ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும்போது கண்ணதாசன் உதவி செய்துள்ளார். சந்திரபாபு தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதன் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு ஐந்து வயது குழந்தை தன் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது போல அமைத்திருக்கிறார்.

இந்த காட்சியை அனுமதிக்க முடியாது என சென்சார் போர்ட் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்துகொண்ட கண்ணதாசன் சென்சார் அதிகாரிகளிடம் சந்திரபாபுவுக்காக பரிந்து பேசியுள்ளார். அதனால் அந்த காட்சியை நேரடியாகக் காட்டாமல் கதாநாயகியின் முகத்தில் அதிர்ச்சி ஏற்படுவது போல மாற்றி வைக்க சென்சார் அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். இந்த க்ளைமேக்ஸ் உடன்தான் தட்டுங்கள் திறக்கப்படும் திரைப்படம் ரிலீஸ் ஆனதாம்.

vinoth

Recent Posts

முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கண் அசைவு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற CM விஜய்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு இதுதான் காரணமா…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…

10 minutes ago

“விஜய் தான் CM.. ஆனா பின்னால இருந்து இயக்குறது இவரா?”…. அண்ணா அறிவாலயத்தில் வெடித்த எழிலரசன்… தமிழக அரசியலை உலுக்கும் பரபரப்பு….!

தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான…

10 minutes ago

BREAKING: சம்பளம் உயர்ந்தது.. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு வந்த செம ஹேப்பி நியூஸ்….!

தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு…

17 minutes ago

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

25 minutes ago

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

35 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

42 minutes ago