#image_title
கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய புகழ்பெற்ற பாடல் ஆசிரியரும் கவிஞரும் ஆவார். தனது வாழ்நாளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் ஐந்தாயிரதுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் கட்டுரைகள் என பல எழுதியவர். இவரது பாடல்களில் வாழ்க்கைக்கு தகுந்த தத்துவங்களை உண்மைகளை அனுபவ வார்த்தைகளை பாடலின் மூலமாகவே மக்களுக்கு புரியும்படி சொல்லிவிடுவார். அத்தனை திறமையானவர் கண்ணதாசன்.
சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் கண்ணதாசன். தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்த ஒரே பாடலாசிரியர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. காரைக்குடிக்கு அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்து வளர்ந்த கண்ணதாசன் தமிழின் மீது சிறு வயதில் இருந்தே அதிக பற்று கொண்டிருந்தவர். பல வெற்றி திரைப்படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார் கண்ணதாசன்.
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் படங்களுக்கு பெரும்பாலான பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். இவரது பாடல்களை கேக்கும்போதே கண்ணீர் வழிந்து விடும். அந்த அளவுக்கு உருக்கமாக வார்த்தைகளை நம் மனதை பிழியும் வகையில் எழுதி இருப்பார் கண்ணதாசன். கண்ணதாசன் எப்படிப்பட்டவர் என்றால் தான் பார்க்கும் காட்சிகளை அப்படியே பாடலாக எழுதக்கூடிய வல்லமை பெற்றவர். அப்படி ஒரு சோகமான அவரது வாழ்வில் இக்கட்டான நிலைமையில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அது என்னவென்று இனி காண்போம்.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் பாசமலர். இந்த படத்தில் ஏழு பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார். எட்டாவதாக அவர் பாடல் எழுத வேண்டிய நேரத்தில் கண்ணதாசன் அவர்களின் தங்கை பாம்பு கடித்து மரணப்படுக்கையில் இருப்பதாக போன் வந்தது. உடனே எம் எஸ் வி தலையில் கை வைத்து உக்காந்து விட்டாராம். உடனே அந்த சூழ்நிலையிலும் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். ஃபோனிலேயே தனது பாடல்வரிகளை அசிஸ்டன்ட் இடம் எழுத சொல்லி இருக்கிறார். அப்படி உருவான பாடல் தான் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்றே அமைதி கொண்டாள் என்ற பாடலாகும்.
தன் சித்தி அடித்துத் துன்புறுத்துவதாகவும், தந்தை தனக்கு ஆதரவாக இல்லை என்றும் ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சிறுமி,…
காசிப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண் ஒருவர், புகுந்த வீட்டினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம்…
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததாக பரவிய தகவலைக் கேட்டு,…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வி குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) வருத்தம் தெரிவித்ததாகப் புதுச்சேரி மாநில…
தலைநகர் டெல்லியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வெளிப்பகுதியான முகுந்த்பூர் பகுதியில், தன்…