தன்னை குடிகாரன் என்று திட்டிய எம்.எஸ்.வி-ஐ பாடல் மூலம் அழ வைத்த கண்ணதாசன்.. அந்தப் பாட்டு இதுதானா..?

Spread the love

கடந்த 1962 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேவிகா நடித்த திரைப்படம் தான் நெஞ்சில் ஓர் ஆலயம். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்த நிலையில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் கிளாசிக். அதிலும் குறிப்பாக சொன்னது நீதானா என்ற பாடல் காலத்தை தாண்டி இன்றும் ரசிகர்கள் மனதில் நின்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கணவன் இறக்கும் தருவாயில் தன் மனைவியை பார்த்து வேறொரு நபரை திருமணம் செய்யும்படி அவர் கூறுவார்.

இதனைக் கேட்ட மனைவிக்கு அதிர்ச்சியை தாங்க முடியாமல் வருவது தான் சொன்னது நீதானா என்ற பாடல். இந்த சுச்சுவேஷனுக்கு ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று எம்.எஸ். விஸ்வநாதனிடம் இயக்குனர் ஸ்ரீதர் கூறியுள்ளார். அதற்காக நீண்ட நாட்கள் எம்.எஸ்.வி டியூன் போட்டு பார்த்தார். ஆனால் எதுவுமே செட்ஆகாத நிலையில் உடனே கண்ணதாசனை அழைத்து முதலில் பாடல் எழுத சொல்வோம், அதன் பிறகு அந்த வரிகளுக்கு ஏற்றது போல டியூன் போட்டு கொள்ளலாம் என்று எம் எஸ் வி முடிவெடுத்துள்ளார். ஆனால் எப்போதுமே ஸ்டூடியோவுக்கு 11 மணிக்கு வந்துவிடும் கண்ணதாசன் அன்று ஒரு மணி ஆகியும் வராததால் எம்.எஸ்.விக்கு அந்த நேரத்தில் நல்ல பசி எடுத்துள்ளது. கண்ணதாசன் இவ்வளோ நேரம் ஆகியும் வரலையா? இந்த குடிகாரர்களை நம்பினால் இப்படித்தான் என்று எம் எஸ் வி கூறியுள்ளார்.

அதனை பக்கத்தில் இருந்த ஒரு நபர் கேட்டுவிட்டு 2 மணி நேரம் கழித்து வந்த கண்ணதாசனிடம் எம் எஸ் வி திட்டியதை கூறியுள்ளார். ஆனால் அதனை கண்ணதாசன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்து எம் எஸ் வி ஸ்டூடியோ வந்த போது பாடலுக்கான சிச்சுவேஷனை கண்ணதாசனிடம் விளக்கி கூறியுள்ளார். அதேசமயம் தன் நண்பன் தன்னை குடிகாரன் என்று திட்டியதும் கண்ணதாசன் மனதில் ஓடிக்கொண்டிருக்க அந்த சிச்சுவேஷனையும் தன்னை திட்டியதையும் ஒரே நேரத்தில் சொல்லும் விதமாக அவர் எழுதியுள்ளார். அந்தப் பாடல் தான் சொன்னது நீதானா? சொல் சொல் என் உயிரே என்று முதல் வரியை எழுதினார். இதனைக் கேட்டதும் எம்.எஸ்.விக்கு அழுகை வந்துவிட்டதாம். நான் ஒரு கோபத்தில் உன்னை அப்படி திட்டி விட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். உடனே கண்ணதாசன் விச்சு நீ ஒரு குழந்தை போய் டியூன் போடு என்று அன்பாக கூறினாராம்.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

15 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

20 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

24 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

28 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

32 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

33 minutes ago