பிரபல சீரியல் நடிகையான பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வளம் வந்தவர் நடிகை பவித்ரா ஜெயராம். தெலுங்கு மொழியில் திரினயானி என்கின்ற தொடரில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிகப்பெரிய புகழை பெற்றவர்.
இவர் கன்னட சினிமாவிலும் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார். ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்ததில் பேருந்து மீது வேகமாக மோதியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷெரிபள்ளி கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அப்போது ஹைதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக மோதி கார் நொறுங்கியது. இதில் பவித்ரா ஜெயராமின் உறவினரான அபேஷா, டிரைவர் ஸ்ரீகாந்த், நடிகர் சந்திரகாந்தா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களின் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது உடலை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கன்னடம் மட்டும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயம் அடைந்த உறவினர் மற்றும் நடிகர் சந்திரகாந்துக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.