தமிழ் சினிமாவில் 80 களிலும் 90 களிலும் ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரபு. சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு சங்கிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து சிவாஜி கணேசனோடு பல படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் சோலோ ஹீரோவாக நடிக்க தொடங்கிய அவருக்கு அக்னி நட்சத்திரம், சின்னத்தம்பி உள்ளிட்ட படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. பிரபுவின் தனிச்சிறந்த கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அசாத்தியமாக நடனமாடுவதும், ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்புவதும்தான்.
90 களில் பிரபு ஒரு சர்ச்சையில் சிக்கினார். அப்போது அவர் தொடர்ச்சியாக நடிகை குஷ்புவோடு படங்களில் நடித்தார். அதனால் இருவரும் காதலிப்பதாக பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கள் எல்லாம் பரவின. இதற்கிடையில் அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக ஒரு முன்னணிப் பத்திரிக்கையில் செய்தி கூட வெளியானது.

prabhu and kushboo
இந்த திருமணத்தின் போது பிரபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் பிரபுவின் தந்தையான சிவாஜி கணேசனுக்கு கடும் கோபத்தை அளிக்க, அவர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பிரபுவை சுட ஆவேசமாகக் கிளம்பிவிட்டாராம்.
ஆனால் அன்று எப்படியே சிவாஜியிடம் இருந்து பிரபு தப்பித்துவிட்டார். அதன் பிறகு பிரபு குஷ்பு தம்பதியையும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிவாஜி பிரித்து வைத்துவிட்டாராம். அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குஷ்பு சில ஆண்டுகள் கழித்து இயக்குனர் சுந்தர் சி யை மணந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவால் பிரபுவின் சினிமா மார்க்கெட் குறைய ஆரம்பித்ததாம். ஏனென்றால் குஷ்புவை நம்பவைத்து பிரபு ஏமாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். அதன்பின்னர் பிரபு நடித்த படங்களும் அடுத்தடுத்து ப்ளாப் ஆனதால் அவர் தனது ஸ்டார் அந்தஸ்த்தை இழந்ததாக சொல்லப்படுகிறது.