த்ரிஷா, நயன்தாராவை ஓரம் கட்டிய சந்திரமுகி பட நடிகை.. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் இவர்தான் ஃபர்ஸ்ட்..!!

By Priya Ram

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் த்ரிஷா, நயன்தாரா. இது லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். 20 வருடங்களுக்கு மேல் ஆக திரையுலகில் பயணிக்கும் நயன்தாரா 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

ஒரு படத்திற்கு மட்டும் நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது கமலுடன் தக் லைப் படத்தில் கூட்டணி சேர்ந்துள்ள த்ரிஷா 12 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கி கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.

Nayanthara

ஆனால் நயன்தாரா, திரிஷா என இருவரையும் ஓரங்கட்டி நடிகை கங்கனா ராணாவத் அதிக சம்பளம் வாங்குகிறார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளார். சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்த லாரன்ஸ் மாஸ்டருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது ஆனால் அதைவிட அதிகமாக கங்கணாவுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

தற்போது கங்கணா கமிட்டான படங்களுக்கு 27 கோடி ரூபாய் வரை சம்பளத்தை பேசி முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக படங்கள் வெற்றி பெற்று மார்க்கட் அதிகமாக இருந்தால் தான் சம்பளம் ஏறும். ஆனால் கங்கணா ராணாவத்தை பொருத்தவரை அவரது படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவிட்டாலும் சம்பளம் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது.

author avatar
Priya Ram