பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா கடந்த 1999-ஆம் ஆண்டு ஜெயா டிவியில் தனது பயணத்தை தொடங்கினார். 2000 ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அர்ச்சனா பிரபலமானார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தனது பயணத்தை தொடங்கி பல முன்னணி சின்னத்திரை சேனல்களில் தொகுப்பாளியாக வேலை பார்த்தார்.
இன்றளவும் கனவுகளோடு வலம் வரும் பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார் அர்ச்சனா. அவரது மகள் சாரா வினித்தும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த நிலையில் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொகுசு கார் வாங்கி இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அர்ச்சனா, அவரது மகள், தங்கை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி காரை வாங்கியுள்ளனர்.
மேலும் தனது 25 வருட கனவு பலித்து விட்டது என்றும், என் தந்தையிடம் நான் ஜெயித்து விட்டேன் என்று உரக்க கத்தும் தருணம் வந்துவிட்டது எனவும் அர்ச்சனா கூறியுள்ளார். அர்ச்சனா பிரபல பென்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு சொகுசு காரை விலைக்கு வாங்கியுள்ளார். Mercedes Benz நிறுவனத்தின் GLC 22od என்ற காரைத்தான் அர்ச்சனா வாங்கியுள்ளார். அதன் விலை கிட்டத்தட்ட 86 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
View this post on Instagram