CINEMA
ஆக்ரோஷமாக சண்டை போடும் நடிகை சரண்யா.. கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரளித்த பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!
நடிகை சரண்யா பொன்வண்ணன் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் அதன் பிறகு முன்னணி நடிகர்களான ஜீவா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமானார். நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் சரண்யாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்பவர் மருத்துவமனைக்கு செல்வதற்காக காரை வெளியே எடுக்க முயன்றார். அதற்காக தனது வீட்டின் 20 அடி உயர இரும்பு கேட்டை திறந்த போது அந்த கேட் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண்யா பொன்வண்ணன் கார் மீது லேசாக மோதி சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சரண்யா ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
மேலும் சரண்யா ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீதேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல நடிகை சரண்யாவும் தனது காரை சேதப்படுத்தி தன்னையும் தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தையால் பேசிய ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சரண்யா நான் ஸ்டாப்பாக கைகளை நீட்டி ஆக்ரோஷமாக சண்டை போடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.