ரீமேக் ஆகும் கமலின் ‘சத்யா’ படம்.. இவர் தான் ஹீரோவா.. 10 பொருத்தமும் கரெக்ட்டா இருக்கே..

By Archana

Published on:

நடிகர் கமல் அவர்களின் நடிப்பில் 1988ல் வெளிவந்த படம் தான் சத்யா. கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது. படித்து வேலை இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞன் நாட்டில் நடக்கும் ஊழல், ஏமாற்று வேலை உள்ளிட்டவையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது. கமலுக்கு நல்லதொரு திருப்புமுனையை இந்த திரைப்படம் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், ரஜினிகாந்தின் “பாட்சா” படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படமே இந்த சத்யா தான், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்போதைய இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு தூண்டுதலாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். கமலுக்கு ஜோடியாக நடிகை அமலா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த திரைப்படம் ரீமேக் ஆகா உள்ளது.

அதில் நடிகர் அசோக் செல்வன் கமல் ஹாசன் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளிவந்த போர் தொழில் மற்றும் ப்ளூ ஸ்டார் திரைப்படங்கள் அசோக் செல்வனுக்கு நல்லதொரு வெற்றியை தேடி தந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த சத்யா ரீமேக் படத்தை இயக்க உள்ளாராம்.

இது குறித்து அதிகார பூர்வ அறிவுப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அசோக் செல்வன் சமீபத்தில் இந்த சத்யா படத்தில் வரும் கமலின் கெட்டப்பில் தான் காணப்படுகிறார். இதனை வைத்து பார்க்கும்போது இந்த தகவல் உறுதியதாக தெரிகிறது. போர் தொழில் படத்துக்கு பின்னர் இந்த கூட்டணி மீண்டும் ஒரு வெற்றி கனியை ருசிக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

author avatar
Archana