17 லட்சம் கோடி சொத்து.. இந்தியாவின் பணக்கார நபர் இவர் தான்.. யார் இந்த ஓசுமான் அலி கான்..?

By Deepika

Updated on:

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் யார் என கேட்டால் அம்பானியை தான் சொல்வோம், ஆனால் அவரை விட 100 மடங்கு சொத்து வைத்திருந்தவர் யார் என தெரியுமா அவர் தான் ஒஸ்மான் அலி கான். இவர் ஹைதராபாத்தில் நிஜாம் ஆவார். பிரிட்டிஷ் காலத்தில் இவரின் சொத்துமதிப்பு 230 பில்லியன் டாலர் அதாவது 17 லட்சம் கோடி ஆகும்.

Mir osman ali khan

இவர் 1911 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நிஜாம் ஆக முடிசூடினார். 1340 கோடி மதிப்பிலான வரன்கள் இவரிடத்தில் இருந்தது. அப்போது நிஜாம் ராஜ்ஜியத்தின் அளவு இடாலி நாட்டின் மொத்த அளவாக இருந்தது. இவருக்கென கரன்சி நோட்டுகள் இருந்தது. சொந்தமாக ஏர்லைன்ஸ் வைத்திருந்தார், அதுமட்டுமல்ல தங்கம், வைரம், வைடூரியம் இவரிடம் கொட்டி கிடந்தது. இவரின் பூர்வீக சொத்துக்களை விட இவர் சம்பாரித்த சொத்துக்கள் தான் அதிகம்.

   
Mir osman ali khan net worth

இவர் கோல்கொண்டா வைர சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்தார், அதிலிருந்தே கோடி கணக்கான சொத்துக்களை வைத்திருந்தார். 1965 ஆம் ஆண்டு நம் இந்திய டிபன்ஸ் ஆர்மிக்கு 500 கிலோ மதிப்பிலான தங்கத்தை வாரி வழங்கினார். இவரிடம் 50 வகையான ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தது. இன்றும் இவரின் சொத்துமதிப்பு யாரிடமும் இல்லை என்பது தான் உண்மை.

NIzam king Mir osman ali khan

இப்படி பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரரானா ஒஸ்மான் அலி கான் ஹைதராபாத்தை மிகசிறந்த ராஜ்ஜியமாக உருவாக்கினார், தன் நாட்டு மக்களுக்கு அத்தனை நன்மைகளை செய்த ராஜா இவர் தான். இனி வருங்காலத்தில் கூட இவர் அளவுக்கு யாரும் சொத்து சம்பாரிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

 

author avatar
Deepika