Categories: சினிமா

விஜய்யையும் அஜித்தையும் ஒரு படத்தில் இணைத்து நடிக்கவைக்க ஆசைப்பட்ட கமல்… எந்த படத்தில் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் முதலாகத் தயாரித்த படம் என்றால் அது ராஜபார்வைதான். கமல்ஹாசனின் 100 ஆவது படம் ராஜபார்வை. அதனால் அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் அது தோல்விப் படமாக அமைந்தது. அதுபோல அவர் பரிசோதனை முயற்சிகளாக மேற்கொண்ட விக்ரம். ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ் என பல படங்கள் இப்போது கொண்டாடப்பட்டாலும் அவை வெளிவந்த காலத்தில் தோல்விப் படங்களே.

ஆனால் அவரின் சில பரிசோதனை முயற்சி படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. அப்படி ஒரு படம்தான் ‘உன்னைப் போல் ஒருவன்’. இந்தி படமான எ வெர்னஸ்டே படத்தை ரீமேக் செய்து அதில் நடித்தார் கமல்ஹாசன். இந்த படத்தில் அவரோடு இணைந்து மோகன்லால், வெங்கடேஷ் போன்ற பிற மொழி நடிகர்களும் நடித்தார்கள்.

இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு இளம் வயது போலீஸ் அதிகாரிகள் கதாபாத்திரத்தில் விஜய்யையும் அஜித்தையும் நடிக்கவைக்க வேண்டும் என கமல் ஆசைப்பட்டாராம். அதற்கானப் பேச்சுவார்த்தையும் நடந்ததாம். ஆனால் சில காரணங்களால் அது கைகூடவில்லை. பின்னர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் இன்னொரு தெலுங்கு நடிகர் அதில் நடித்தார்.

vinoth

Recent Posts

ஐயோ பாவம்… கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்த வாழ்க்கை… தார் வாகனம் ஆட்டோ மீது மோதி கொடூர விபத்து… நடுங்கவைக்கும் CCTV காட்சி…!

மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கிலுள்ள பாமோன் கம்பூ பகுதியில், மஹிந்திரா தார் வாகனமும் ஆட்டோ ரிக்ஷாவும் நேருக்கு நேர் மோதி…

5 minutes ago

அடேய்… மரியாதையா கேட்டா தரமாட்டீங்களா?… உணவகத்தில் புகுந்து ஊழியர்களை… வெளுத்து வாங்கிய இளைஞர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!!

ஆகஸ்ட் 15 அன்று மாலையில் பிம்பிரி-சின்ச்வாடின் பிம்பிளே சௌதாகர் பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மூன்று இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு…

17 minutes ago

ஐயோ கொடுமையே… இங்க நிக்கவே இடமில்ல… இதுல நீ வேறயா?… ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் வெடித்த பயங்கர மோதல்… மும்பையில் அதிரவைக்கும் சம்பவம்…!

மும்பை அந்தேரியிலிருந்து விரார் நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணிடையே திடீரென காரசாரமான மோதல் ஏற்பட்டது.…

26 minutes ago

அட கடவுளே… பால் வாங்கி வந்த 75 வயது பாட்டியை… மரண பயம் காட்டிய தெருநாய்கள்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!

மும்பையின் அந்தேரி கிழக்கில் உள்ள வாஸ்து சில்ப் கூட்டுறவு வீட்டுவசதி சங்க வளாகத்தில், பால் மற்றும் பேட்டரி வாங்கிவிட்டு வீடு…

34 minutes ago

மனைவியை ஏமாற்றினால் ஆப்பு!… அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% கட்… வெளியானது அதிரடி சட்டம்…!!

அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள்…

37 minutes ago

அட கொடுமையே… கண் சிமிட்டும் நேரத்துல 70 கிராம் மாலையை காணோம்… பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்… நகைக் கடையையே நிலைகுலைய வைத்த பகீர் சம்பவம்…!

ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன்…

41 minutes ago