விஜய்யையும் அஜித்தையும் ஒரு படத்தில் இணைத்து நடிக்கவைக்க ஆசைப்பட்ட கமல்… எந்த படத்தில் தெரியுமா?

By vinoth on பிப்ரவரி 15, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

   

கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் முதலாகத் தயாரித்த படம் என்றால் அது ராஜபார்வைதான். கமல்ஹாசனின் 100 ஆவது படம் ராஜபார்வை. அதனால் அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் அது தோல்விப் படமாக அமைந்தது. அதுபோல அவர் பரிசோதனை முயற்சிகளாக மேற்கொண்ட விக்ரம். ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ் என பல படங்கள் இப்போது கொண்டாடப்பட்டாலும் அவை வெளிவந்த காலத்தில் தோல்விப் படங்களே.

   

 

ஆனால் அவரின் சில பரிசோதனை முயற்சி படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. அப்படி ஒரு படம்தான் ‘உன்னைப் போல் ஒருவன்’. இந்தி படமான எ வெர்னஸ்டே படத்தை ரீமேக் செய்து அதில் நடித்தார் கமல்ஹாசன். இந்த படத்தில் அவரோடு இணைந்து மோகன்லால், வெங்கடேஷ் போன்ற பிற மொழி நடிகர்களும் நடித்தார்கள்.

இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு இளம் வயது போலீஸ் அதிகாரிகள் கதாபாத்திரத்தில் விஜய்யையும் அஜித்தையும் நடிக்கவைக்க வேண்டும் என கமல் ஆசைப்பட்டாராம். அதற்கானப் பேச்சுவார்த்தையும் நடந்ததாம். ஆனால் சில காரணங்களால் அது கைகூடவில்லை. பின்னர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் இன்னொரு தெலுங்கு நடிகர் அதில் நடித்தார்.