தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு ராஜதந்திரம் மற்றும் மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் பிரபலமான நடிகை தான்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய கேள்விக்கு 2020 ஆம் ஆண்டு என்னுடைய காதல் முறிந்தது, அதிலிருந்து வெளியேற சிறிது நாட்கள் ஆனது, தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை, என்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.
இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளார் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார். இவர் முன்னதாக “சரவணன் இருக்க பயமேன்” என்ற படத்தில் உதயநிதியோடு நடித்திருந்தார். இப்படியான நிலையில் ரெஜினா காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் காதலர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். அதில், நான் முதலில் ஒருவரை காதலித்தேன். அவருக்கு இப்போ திருமணம் நடந்து விட்டது. முதல் காதல் என்பது எப்பவும் ஒரு ஸ்பெஷல் தான்.
அந்த ஃபீலிங்ஸ் வேற மாதிரி இருக்கும். ஃபர்ஸ்ட் டைம் சிகரெட் குடிக்கும் போது அல்லது தண்ணி அடிக்கும் போது அந்த ஞாபகம் அந்த ஃபீலிங்ஸ் எப்பவும் நமக்கு இருக்கும். அது மாதிரி தான் முதல் காதல் வரும்போது வயித்துல இருந்து பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி பீலிங்ஸ் எல்லாம் வரும். அதெல்லாம் எனக்கும் இருந்துச்சு. முதல் காதல் ரொம்ப க்யூட் ஆகவே இருந்தது. இப்போ காதலர் தினத்தில் நான் சொல்றத அட்வைசா யாரும் எடுத்துக்க வேண்டாம். காதலிக்கும்போது பாதுகாப்பு என்பது ரொம்ப முக்கியம். காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள், ஆனா அதெல்லாம் பொய். காதலிக்கும் போது உங்களுக்கு என்ன தோணுதோ உங்க மனசும் மைண்டும் என்ன சொல்லுதோ அதைக் கேட்டு தெளிவான ஒரு முடிவு எடுத்துக்கோங்க என்று ரெஜினா அட்வைஸ் வழங்கியுள்ளார்.