Categories: சினிமா

கமல்ஹாசன் ஒரு நாவல் எழுதிருக்காரா?… அது படமா வந்திருக்கா?… பலரும் அறியாத ஆச்சர்யத் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு தனியொருப்  பல்கலைக்கழகமாக விளங்குபவர் கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல் மற்றும் நடனம் என தொடாத துறைகளே இல்லை என சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பல பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருந்த காலத்தில் உருவான படம்தான் ஆளவந்தான். மிகப் பிரம்மாண்டாம அதி உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த படத்தைப் படமாக்கி இருந்தார்கள். மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்து தயாரிப்பாளர் தாணுவுக்கு மிக பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தின் தோல்விக்கு மோசமான திரைக்கதைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தோல்வியால் அதன் தயாரிப்பாளர் தாணு கடுமையான பொருளாதார சிக்கல்களுக்கு ஆளானார். அதனால் அது சம்மந்தமாக அவருக்கும் கமலுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இன்றுவரை இணைந்து பணியாற்றாமல் உள்ளனர்.

இந்நிலையில் ஆளவந்தான் படம் பற்றி பலரும் அறியாத ஒரு சுவாரஸ்யமானத் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். 1980 களில் இதயம் பேசுகிறது என்ற பத்திரிக்கையில் கமல்ஹாசன் ‘தாயம்’ என்றொரு தொடர்கதையை எழுதினார்.  அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் அவர் பெரிதாக- சில கவிதைகள் தவிர்த்து எழுதவில்லை. அந்த தாயம் தொடர்தான் ஆளவ்ந்தான் படத்தின் கதையாக அமைந்தது. அதன் பின்னர் அதில் சில மாற்றங்கள் செய்து ஆளவந்தான் திரைக்கதையை அமைத்தனர்.

vinoth

Recent Posts

போர்வைக்குள் பதுங்கியிருந்த எமன்…! ஒரே கட்டிலில் தூங்கிய அண்ணன்-தங்கைக்கு நடந்த சோகம்…. அலறி துடித்த குடும்பத்தினர்…. பதற வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…

21 minutes ago

“அறைக்குள் பதுங்கி இருந்த உ.பி வாலிபர்…” வீட்டில் பெண் அதிகாரி கொடூரமாக கொலை… நடந்தது என்ன…? அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்… பகீர் சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அனிதா பிந்த்…

1 மணத்தியாலம் ago

“எல்லாம் போச்சே… வாழ்நாள் உழைப்பு…” கண்முன்னே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடம்…. கதறி அழுத தொழிலதிபர்…. 11 மாத போராட்டத்திற்கு பிறகு துயரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரபல மத்திய சந்தைப் பகுதியில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொழிலதிபர் ஒருவர் கட்டிய…

1 மணத்தியாலம் ago

“அமெரிக்காவில் இருந்து வந்த போன்கால்”…. விக்கிரவாண்டி மேடையில் அன்புமணி போட்ட வெடி…. சௌமியா அன்புமணிக்கு ஃபேன்ஸ் கிளப்….!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட பிறகே பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று…

2 மணத்தியாலங்கள் ago