Categories: சினிமா

அடுக்குமொழியில் வாலி எழுதிய ஹிட் பாடல்.. இவங்கதான் பாட சரியான ஆள் என்று பாடவைத்த இளையராஜா

Spread the love

வேலையில்லாப் பட்டதாரியின் நிலைமையை கடந்த 30 வருடங்களுக்கு முன்பே உரக்கச் சொல்லி வெளிவந்த படம்தான் சத்யா. உலகநாயகன் கமல்ஹாசன், அமலா, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம். இப்படத்தில் இடம்பெற்ற பாடலான வளையோசை கலகலகவென பாடலை இன்றும் இளசுகள் தங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ரிங்டோனாக வைத்திருக்கின்றனர் என்றால் அதற்கு இந்த நால்வர் கூட்டணியே அச்சாரம்.

வாலி, இளையராஜா, எஸ்.பி.பி ஆகிய மூவரைத் தவிர்த்து மற்றுமொரு பாடகர் இந்தியாவின் கவிக்குயில் என்றழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் தான். இந்தப் பாடலுக்கு இவரை அழைத்த விதம் பற்றியும், பாடல் உருவான விதம் பற்றியும் இளையராஜா கூறுகையில், “நான் இயற்றிய டியூனுக்கு பாடல் எழுத கவிஞர் வாலி வந்திருந்தார்.

#image_title

அப்போது டியூன் என்னவென்று அவர் கேட்க சொன்னவுடன் உடனே வளையோசை என எழுத ஆரம்பித்தார். யார் பாடபோகிறார் என்று கேட்டவுடன் லதாஜி என்றேன். உடனே வாலி மொழி பிரச்சினை வருமே என்று கூற அதற்கு ஏற்றாற் போல் நீங்கள் இரட்டைக்கிளவியில் பாடல் முழுக்க இருமுறை வரும்படி எழுதித் தாருங்கள் என்று கேட்டவுடன் வாலி இயற்றிய பாடல் தான் “வளையோசை  கலகலவென கவிதைகள் படித்திடும், குளு குளு தென்றல் காற்று” என்ற பாடல்.

மார்க்கெட் போனாலும் பரவாயில்லை.. அந்தக் கால லேடி விக்ரம் செஞ்ச தரமான சம்பவம்..

பாடல் பதிவின் போது லதாஜி வரும் போது அவர் பாடலைக் கேட்டவுடன் ஷாக் ஆனார். எப்படி பாடப் போகிறேன் என்று கேட்டவுடன் எளிமையான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கிறது. எனவே பாடுவது சற்று எளிமைதான் என்று கூறிய பிறகு அவர் பாடி முடித்தார். இவ்வாறு தான் அந்தப் பாடல் உருவாகியது என இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

#image_title

மேலும் அந்தப் பாடலுக்கு முதலில் எழுதிய நோட்ஸ் வேறு, பின்னர் எழுதிய நோட்ஸ்-ல் சில திருத்தங்கள் செய்து பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசை ஏற்ற இறக்கத்துடன் வாசித்ததாகவும் கூறினார் இசைஞானி. மேலும் இளையராஜா லதா மங்கேஷ்கரை  பிரபு, ராதா நடித்த ஆனந்த் படத்திற்காக ஆராரோ ஆராரோ என்ற பாடலையும் பாடவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

3 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

6 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

12 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

23 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

31 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

52 minutes ago