CINEMA
அடுக்குமொழியில் வாலி எழுதிய ஹிட் பாடல்.. இவங்கதான் பாட சரியான ஆள் என்று பாடவைத்த இளையராஜா
வேலையில்லாப் பட்டதாரியின் நிலைமையை கடந்த 30 வருடங்களுக்கு முன்பே உரக்கச் சொல்லி வெளிவந்த படம்தான் சத்யா. உலகநாயகன் கமல்ஹாசன், அமலா, வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம். இப்படத்தில் இடம்பெற்ற பாடலான வளையோசை கலகலகவென பாடலை இன்றும் இளசுகள் தங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ரிங்டோனாக வைத்திருக்கின்றனர் என்றால் அதற்கு இந்த நால்வர் கூட்டணியே அச்சாரம்.
வாலி, இளையராஜா, எஸ்.பி.பி ஆகிய மூவரைத் தவிர்த்து மற்றுமொரு பாடகர் இந்தியாவின் கவிக்குயில் என்றழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் தான். இந்தப் பாடலுக்கு இவரை அழைத்த விதம் பற்றியும், பாடல் உருவான விதம் பற்றியும் இளையராஜா கூறுகையில், “நான் இயற்றிய டியூனுக்கு பாடல் எழுத கவிஞர் வாலி வந்திருந்தார்.
அப்போது டியூன் என்னவென்று அவர் கேட்க சொன்னவுடன் உடனே வளையோசை என எழுத ஆரம்பித்தார். யார் பாடபோகிறார் என்று கேட்டவுடன் லதாஜி என்றேன். உடனே வாலி மொழி பிரச்சினை வருமே என்று கூற அதற்கு ஏற்றாற் போல் நீங்கள் இரட்டைக்கிளவியில் பாடல் முழுக்க இருமுறை வரும்படி எழுதித் தாருங்கள் என்று கேட்டவுடன் வாலி இயற்றிய பாடல் தான் “வளையோசை கலகலவென கவிதைகள் படித்திடும், குளு குளு தென்றல் காற்று” என்ற பாடல்.
மார்க்கெட் போனாலும் பரவாயில்லை.. அந்தக் கால லேடி விக்ரம் செஞ்ச தரமான சம்பவம்..
பாடல் பதிவின் போது லதாஜி வரும் போது அவர் பாடலைக் கேட்டவுடன் ஷாக் ஆனார். எப்படி பாடப் போகிறேன் என்று கேட்டவுடன் எளிமையான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கிறது. எனவே பாடுவது சற்று எளிமைதான் என்று கூறிய பிறகு அவர் பாடி முடித்தார். இவ்வாறு தான் அந்தப் பாடல் உருவாகியது என இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்தப் பாடலுக்கு முதலில் எழுதிய நோட்ஸ் வேறு, பின்னர் எழுதிய நோட்ஸ்-ல் சில திருத்தங்கள் செய்து பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசை ஏற்ற இறக்கத்துடன் வாசித்ததாகவும் கூறினார் இசைஞானி. மேலும் இளையராஜா லதா மங்கேஷ்கரை பிரபு, ராதா நடித்த ஆனந்த் படத்திற்காக ஆராரோ ஆராரோ என்ற பாடலையும் பாடவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.