மார்க்கெட் போனாலும் பரவாயில்லை.. அந்தக் கால லேடி விக்ரம் செஞ்ச தரமான சம்பவம்..

By John

Updated on:

actress vijayakumari

ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறுவதற்கு நடிகர்கள் செய்யும் முயற்சி மிக அலாதியானது. இவற்றில் குறிப்பிடத் தகுந்தவர் சீயான் விக்ரம். சேது, பிதாமகன், காசி, அந்நியன், தங்கலான், இருமுகன் என இவர் வெரைட்டி காட்டாத கதாபாத்திரங்களே இல்லை.

ஆனால் இன்று நாம் சீயான் விக்ரமைக் கொண்டாடுவது போல அந்தக் காலத்திலேயே தனது மார்க்கெட் போனாலும் பரவாயில்லை என்று கருப்பு வேஷம் பூச பயப்படும் நடிகைகளுக்கு மத்தியில் கறுப்பு அரிதாரம் பூசி நடித்திருக்கிறார் மார்க்கெட் போனாலும் பரவாயில்லை.. அந்தக் கால லேடி விக்ரம் செஞ்ச தரமான சம்பவம்… தனது நிறத்தையே கருப்பாக மாற்றி மேக்கப் போட்டுக் கொண்டு அவர் நடித்த படம் தான் நானும் ஒரு பெண் என்ற திரைப்படம்.

   
Nanum oru pen
ssr

இப்படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, இப்படி கறுப்பு நிறத்தில் நடித்தால், ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். இதுவரை கஷ்டப்பட்டு சம்பாதித்த பேரும், புகழும் பறிபோய்விடும்’ என்று பலரும் பயமுறுத்தினார்கள். இதனால் விஜயகுமாரிக்கும் அச்சம் ஏற்பட்டது.

vijayakumari
vj

இதையெல்லாம் மீறி அவர் கறுப்புப் பெண்ணாக நடித்தது எப்படி தெரியுமா? நானும் ஒரு பெண் படப்பிடிப்பு தொடங்கிய வேளையில் படத்துக்காகப் போட்ட கறுப்பு மேக்கப்புடன் வேறு பட பூஜை நிகழ்ச்சிக்கு விஜயகுமாரி செல்கையில் அவரைப் பார்த்தவர்கள் எல்லோரும், “நடிகைகளை அழகாகப் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். நீ இந்த கறுப்பு மேக்கப்பில் நடித்து உன் பெயரையே கெடுத்துக் கொள்ளப் போகிறாய்!” என்று சொன்னார்களாம்.

‘இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’… அதிரடியாக தளபதி விஜய் வெளியிட்ட தகவல்… அப்படின்னா இதுதான் கடைசி படமா..?

இதனால் அவரின் திரை எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று பயந்தாராம். குழப்பத்தில் இருந்த விஜயகுமாரியை சிவாஜி என்னவென்று கேட்க “ஏவி.எம். தயாரிக்கும் நானும் ஒரு பெண் படத்தில் இப்படி நடிக்கிறேன்” என்று கூற, உடனே சிவாஜி, “விஜி! உன்னைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் பெண்ணாக இருந்திருந்தால் ஏவி.எம். செட்டியார் அவர்களிடம் போய், இந்த வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்குக் கொடுங்கள் என்று கேட்டிருப்பேன்” என்றார்.

அத்துடன், “விஜி, இந்த கறுப்பு வேடம் உனக்கு பெரிய புகழை கொடுக்கப்போகிறது. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு மனதை குழப்பிக்கொள்ளாமல் தைரியமாக நடி!” என்று வாழ்த்தினாராம்.

vijaya main cine

அவர் வாழ்த்தியது போலவே “நானும் ஒரு பெண்” மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், சிறந்த படத்துக்கான மத்திய அரசின் விருதையும், (வெள்ளிப்பதக்கம்) பெற்றது. இதில் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடியாக விஜயகுமாரி நடித்திருந்தார். திருலோகசந்தர்இயக்கிய இந்தப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தைப் பார்த்து ஒரு பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தில் “நான் கறுப்பாக இருக்கிறேன் என்பதால் என் கணவர் என்னை வெறுத்தார். கல்யாணம் ஆகியும், கன்னியாகவே வைத்திருந்தார். இந்நிலையில், நீங்கள் நடித்திருந்த “நானும் ஒரு பெண்” படத்தை அவர் பார்த்துவிட்டு வந்தார்.

அதன்பின் அவர் மனம் மாறி என் மீது அன்பு காட்டினார். எங்கள் வாழ்வும் மலர்ந்தது. நாங்கள் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இதற்கு காரணம் “நானும் ஒரு பெண்” படத்தில் நீங்கள் கறுப்பாக நடித்ததுதான்!” என்று எழுதி, அதில் “நன்றி” என்பதை அவருடைய ரத்தத்தில் எழுதி இருந்தாராம். இக்கடிதத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பெருமை அடைந்தாராம் விஜயகுமாரி.