Categories: சினிமா

கண்ணதாசன் எழுதிய பாடலையே நன்றாக இல்லை என நிராகரித்த கமல்ஹாசன்.. ஆனாலும் அதிலிருந்து சுட்ட டைட்டில்..

Spread the love

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக இருந்தது கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலகட்டம்தான். 50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.

இதில் மற்ற பாடல் ஆசிரியர்களுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வித்தியாசமே கண்ணதாசன் இசையமைப்பாளர் பாடல் மெட்டை சொன்னதுமே வரிகளை மழை போல கொட்டுவார் என்பதுதான். எந்தவொரு மெட்டுக்குமே அவர் வீட்டுக்கு எடுத்து சென்று பாடல் எழுதியதில்லை என்பதுதான். கண்ணதாசனின் பாடல் எழுதும் வேகத்தை இளையராஜா பல மேடைகளில் விதந்தோதி பேசியுள்ளார்.

அதே போல தன்னுடைய பாடலில் யாராவது அதிருப்தி தெரிவித்தால் கூட, அவர்களின் கருத்தை மதித்து ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை அவருக்கு இருந்துள்ளது. இதுபற்றி கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கன்ணதாசன் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் முதல் முதலாக தயாரித்த திரைப்படம் ராஜபார்வை. அந்த படத்துக்கு அப்போது அந்த படத்துக்கு பெயர் வைக்கவில்லை. படத்துக்காக கண்ணதாசனை வைத்து ஒரு பாடலை எழுத சொல்லியுள்ளனர். அதற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்தான் “ராஜபார்வை எந்தன் பக்கமே” என்ற பாடல். ஆனால் அந்த பாடல் பிடிக்கவில்லை எனக் கமல்ஹாசன் கூறிவிட்டாராம்.

ஆனால் கண்ணதாசனிடம் “எனக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை. ஆனால் இந்த பாடலில் எனக்கு படத்துக்கு டைட்டில் கிடைத்துள்ளது. படத்துக்கு ராஜபார்வை என்று டைட்டில் வைத்துக் கொள்கிறேன்” எனக் கூறினாராம். அதற்கு கண்ணதாசன் கோபப்படவேயில்லையாம்.  அதன் பிறகு ராஜபார்வை படத்தில் வேறு பாடல்களை எழுதிக் கொடுத்தாராம். அழகே அழகு என்ற அந்த பாடல் இன்றளவும் ஹிட் பாடலாக அமைந்துள்ளது.

vinoth

Recent Posts

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

8 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

20 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

46 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

53 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

56 minutes ago

பருமன் உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவுவது ஏன்…? மருத்துவ உலகையே உலுக்கிய புதிய கண்டுபிடிப்பு… ஆய்வின் வெளியான அதிர்ச்சி தகவல்…!

உடல் பருமன் என்பது வெறும் தோற்றம் சார்ந்த விஷயம் அல்ல; அது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுடன் சில வகையான…

1 மணத்தியாலம் ago