Categories: சினிமா

தம்பி நீங்க நல்ல நடிகர்தான்… ஆனா அந்த வீணையை வாசிச்சதுதான் பிடிக்கல.. கமலுக்கு அட்வைஸ் செய்த விநியோகஸ்தர்!

Spread the love

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகாநதி, சதி லீலாவதி, தெனாலி, பஞ்ச தந்திரம் என கமல்ஹாசனின் பல படங்கள் இன்றும் கொண்டாடப்பட்டாலும், இந்த படங்கள் ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தின் காப்பி அல்லது தழுவல் என்பது கமல்ஹாசன் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக உள்ளது. இது சம்மந்தமாகக் கமல்ஹாசனே தன்னுடைய படங்கள் பல படங்களின் பாதிப்பில் உருவானவைதான் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் முதலாகத் தயாரித்த படம் என்றால் அது ராஜபார்வைதான். அந்த படத்தில் பார்வையற்ற இசைக் கலைஞராக கமல் நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் தோல்வி பற்றி கமல்ஹாசன் இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசியுள்ளார்.

அதில் “அந்த படம் ரிலீஸாகி தோல்வி அடைந்தவுடன் ஒரு விநியோகஸ்தர் என்னிடம் ‘தம்பி நீங்க நல்ல நடிகர்தான். அதுல ஒன்னும் சந்தேகம் இல்ல. ஆனா படத்துல நீங்க அந்த வீணைய வாசிச்சதுதான் பிடிக்கல” என்று கூறியுள்ளார். படத்தில் கமல்ஹாசன் வயலின் கலைஞராக இருப்பார். வயலின் எது வீணை எது என்று தெரியாத அவர் தனக்கு அட்வைஸ் செய்ததை கமல்ஹாசன் நகைச்சுவையோடு பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

12 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

17 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

23 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

26 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

30 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

34 minutes ago