விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பத்தாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் 35 முதல் 45 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது. கடந்த வாரம் எலிமினேஷனில் முதலில் ஆர் ஜே ஆனந்தியும் அதன் பிறகு சச்சனாவும் தொடர்ந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த வாரம் நாமினேஷனில் ஒன்பது போட்டியாளர்கள் உள்ளனர். தற்போது நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சௌந்தர்யா சத்தம் போட்டு கத்துகிறார். போட்டியாளர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்ட நிலையில் அது தொடர்பான பரபரப்பு ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…