#image_title
குளிர் காலம் வந்து விட்டாலே உடல் உபாதைகளும் சேர்ந்து வந்துவிடும். அந்த நான்கு மாதங்களும் சளி இருமல் ஜலதோஷம் காய்ச்சல் என்று அவதிப்படுபவர் பலர் இருக்கிறார்கள். வீட்டில் ஒருவருக்கு சளி காய்ச்சல் வந்து விட்டாலே அனைவருக்கும் அது தொற்று நோய் போல் பரவி விட்டு தான் செல்லும். மாணவர்கள் அலுவலகப் பணிக்கு செல்பவர்களுக்கு இந்த சளி இருமல் என்பது மிகப்பெரிய தொந்தரவாக தான் இருக்கும். அப்படி இந்த குளிர் காலத்தில் சளி இருமலில் இருந்து விடுபட அது நம்மை தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.
குளிர்காலத்தில் ஜலதோஷம் இருமல் காய்ச்சல் போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். இது மட்டுமல்லாமல் இஞ்சி சாறை நீங்கள் சேர்த்துக் கொள்ளும் போது உங்களுக்கு சளி இருமல் போன்றவைகள் வராது. இஞ்சி சாறை எடுத்து வானொலியில் சிறிது தேன் ஊற்றி கொதித்த பிறகு இஞ்சி சாறை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அதை மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். இது சளி இருமலில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
அடுத்ததாக அடிக்கடி இந்த குளிர்காலத்தில் மிளகு சீரகம் அதிகமாக சேர்த்த ரசம் வைத்து சாப்பிடுங்கள். இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு சளி இருமல் இருந்தால் கூட வெளியேற்றி விடும். அடுத்ததாக சுக்கு மல்லி தண்ணீர் அல்லது சுக்கு மல்லி காபியாக கூட செய்து அருந்தலாம். இந்த சுக்குவுக்கும் மல்லிக்கும் தலை பாரத்தை குறைக்கும் தன்மை இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ நிலவேம்பு கஷாயம் குடிப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு சளி இருமல் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை போய் அணுகி ஆங்கில வழி மாத்திரை மருந்துகளை சாப்பிடுவது இல்லாமல் இது போன்ற இயற்கை முறையான செய்யக்கூடிய கசாயம் போன்றவற்றை தயார் செய்து நாம் குடிக்கும்போது நம் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் மற்றும் இந்த குளிர்கால உபாதைகளில் இருந்து நம்மால் விடுபடவும் முடியும்.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…