Categories: சினிமா

அமிதாப் பச்சனை பிறமொழிகளில் நடிக்க சொன்னேன்…ஆனா அந்த காரணத்தினால அவர் மறுத்துவிட்டார்… கமல் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

பாலச்சந்தர் இயக்கிய ஏக் தூக் ஜே கேலியே என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கமல். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் கமல்ஹாசன். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல பாலிவுட் பட வாய்ப்புகள் கமலுக்கு குவிய ஆரம்பித்தன.

kamalhaasan with amitabh bacchan

கமல்ஹாசனின் அசுர வளர்ச்சியைப் பார்த்து அப்போது பாலிவுட் நடிகர்கள் பயந்ததாகவும், அதனால் அவரை எப்படியாவது பாலிவுட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகின. அமிதாப் பச்சன் கூட கமல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரோடு இணைந்து நடித்த படம் ஒன்றைப் பாதியிலேயே நிறுத்திவிட்டதாக சொல்லப்பட்டது.

இப்படி சொல்லப்பட்டாலும் இந்தியா முழுவதுக்கும் ஒரே சூப்பர் ஸ்டாராக 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சியவர் அமிதாப் பச்சன் என்றால் அது மிகையாகாது. அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் நடித்ததில்லை. ஆனால் இப்போதுதான் கல்கி மற்றும் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Rajinikanth kamalhaasan and amitabh bacchan

இந்நிலையில் அமிதாப் பச்சன் பற்றி பேசியுள்ள கமல்ஹாசன் “நான் பல ஆண்டுகளாக அமிதாப்ஜியை பிராந்திய மொழிப் படங்களில் நடியுங்கள் என சொல்லிவந்தேன். ஆனால் அவர் நீண்ட வசனங்கள் இருக்கும் என்ற காரணத்தால் மறுத்தார். நான் வேண்டுமானால் இந்தியில் பேசி நடிக்கிறேன். நீங்கள் டப் செய்து கொள்கிறீர்களா என்று கேட்பார். நான் அதற்கு முடியாது என்று சொல்லிவிடுவேன்” எனக் கூறியுள்ளார். கமல் சொல்லி பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சன் அவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

56 minutes ago

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

1 மணத்தியாலம் ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

1 மணத்தியாலம் ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

1 மணத்தியாலம் ago