Categories: சினிமா

போலீசிடம் சிக்கும் ரவி, ஸ்ருதி.. உண்மையை கண்டுபிடித்த ரோகினி.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்..!

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் போலி சாமியார் பற்றி முத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்க, மீனா உடனே சந்தேகப்பட்ட உங்களிடம் ஏதாவது சண்டை என்றால் உங்களை தான் அவன் பயப்படுத்த வேண்டும் ஏன் தேவையில்லாமல் உங்கள் அண்ணனை பயப்படுத்துகிறான் என்று சந்தேகத்துடன் கேட்கிறார். உடனே முத்து நீ ஏதாவது தப்பு செஞ்சிட்டியா இல்ல உன் பொண்டாட்டி ஏதாவது தப்பு செஞ்சுருச்சா என்று மனோஜிடம் கேட்கிறார். உடனே பதற்றத்துடன் ரோகினி அங்கிருந்து எழுந்து செல்கிறார். பிறகு முத்து எல்லாத்தையும் முழுசா நான் கண்டுபிடிக்கிறேன் என்று குடும்பத்தினரிடம் கூறிக் கொண்டிருக்கிறார். இதனைக் கண்டு ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ரவியும் ஸ்ருதியும் ஷாப்பிங் சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது ரவியின் ஓனர் பொண்ணு கார் பிரேக் டவுன் ஆகி நடுரோட்டில் நின்று கொண்டிருக்கிறார். இவர்களிடம் லிப்ட் கேட்க மூன்று பேரும் ஒரே பைக்கில் வருகின்றன. அப்போது மனைவிக்காக இப்படி கணவர் நேரம் ஒதுக்குவது எல்லாம் நல்லா இருக்கு என்று பாராட்டிக் கொண்டு வருகிறார். அப்போது போக்குவரத்து காவலர்கள் சாலையில் நின்று கொண்டிருக்க மூன்று பேரும் அவர்களிடம் சிக்குகின்றனர். பிறகு அவர்களிடம் 500 ரூபாய் fine கட்டுகிறார் சுருதி. பிறகு அங்கிருந்து ரவியின் ஓனர் பொண்ணு போக்குவரத்து காவலர் ஒருவரின் பைக்கில் சென்று விடுகிறார்.

அடுத்ததாக முத்து, மனோஜ் மற்றும் ரவி மூன்று பேரும் மொட்டை மாடியில் நின்று கொண்டு கொலுவுக்கு யார் யார் பங்கு என்ன யாரெல்லாம் என்ன செய்யப் போகிறோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக ஸ்ருதியும் மீனாவும் சமையலறையில் கொலுவுக்கு என்னென்ன சமைக்கப் போகிறோம் என்று பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் ரோகிணி உள்ளே வருகிறார். அப்போது இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பின்னர் உங்க ரெண்டு பேருக்கும்தான் சண்டை ஆச்சு இப்போ எப்படி நீங்க பேசிகிட்டு இருக்கீங்க என்று அவர்களிடம் கேட்க உடனே ஸ்ருதி ஏதாவது சொல்லி சமாளிக்கிறார். மீனாவும் அவரிடம் சண்டை போடுவது போல நடிக்கிறார். இருந்தாலும் ரோகிணி சந்தேகத்துடன் தான் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னர் மீனா ரோகினிடம் கொலுவுக்கு உங்க பங்கு என்ன என்று கேட்க, உன்னோட கணவர் போனில் இருந்து அந்த வீடியோவை எடுக்கிறது தான் என் வேலை என்று மனதுக்குள் ரோகிணி சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago