அமிதாப் பச்சனை பிறமொழிகளில் நடிக்க சொன்னேன்…ஆனா அந்த காரணத்தினால அவர் மறுத்துவிட்டார்… கமல் பகிர்ந்த தகவல்!

By vinoth on அக்டோபர் 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

பாலச்சந்தர் இயக்கிய ஏக் தூக் ஜே கேலியே என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கமல். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் கமல்ஹாசன். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல பாலிவுட் பட வாய்ப்புகள் கமலுக்கு குவிய ஆரம்பித்தன.

   

kamalhaasan with amitabh bacchan

   

கமல்ஹாசனின் அசுர வளர்ச்சியைப் பார்த்து அப்போது பாலிவுட் நடிகர்கள் பயந்ததாகவும், அதனால் அவரை எப்படியாவது பாலிவுட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகின. அமிதாப் பச்சன் கூட கமல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரோடு இணைந்து நடித்த படம் ஒன்றைப் பாதியிலேயே நிறுத்திவிட்டதாக சொல்லப்பட்டது.

 

இப்படி சொல்லப்பட்டாலும் இந்தியா முழுவதுக்கும் ஒரே சூப்பர் ஸ்டாராக 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சியவர் அமிதாப் பச்சன் என்றால் அது மிகையாகாது. அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் நடித்ததில்லை. ஆனால் இப்போதுதான் கல்கி மற்றும் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Rajinikanth kamalhaasan and amitabh bacchan

இந்நிலையில் அமிதாப் பச்சன் பற்றி பேசியுள்ள கமல்ஹாசன் “நான் பல ஆண்டுகளாக அமிதாப்ஜியை பிராந்திய மொழிப் படங்களில் நடியுங்கள் என சொல்லிவந்தேன். ஆனால் அவர் நீண்ட வசனங்கள் இருக்கும் என்ற காரணத்தால் மறுத்தார். நான் வேண்டுமானால் இந்தியில் பேசி நடிக்கிறேன். நீங்கள் டப் செய்து கொள்கிறீர்களா என்று கேட்பார். நான் அதற்கு முடியாது என்று சொல்லிவிடுவேன்” எனக் கூறியுள்ளார். கமல் சொல்லி பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சன் அவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.