சினிமா ரசிகன் என்றாலே தன்னுடைய அபிமான நடிகரை அருகில் பார்க்கவும், அவரது கை பிடித்து குலுக்கவும், அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதும்தான் அவனது வாழ்வில் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும். அந்த நடிகருடன் எடுத்த அந்த ஒரு விநாடி புகைப்படம், அவன் வாழ்நாள் முழுவதும் அவனது வாழ்க்கை சரித்திரமாக மாறிப் போகும். அப்படி தன் அபிமான நடிகர் கமல்ஹாசனை பார்க்க வந்த ரசிகர்கள், ஏன்தான் இங்கு வந்தோம் என, நொந்துபோய் திரும்பிப் போன சம்பவம்தான் இப்போது நடத்திருக்கிறது.
கடந்த 7ம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் ஆர்வமாக பங்கேற்ற கமல் ரசிகர்கள், மக்கள் நீதி மய்ய தொண்டர்கள், பொதுமக்கள் கமலுக்கு வாழ்த்து சொல்ல முண்டியடித்து மேடைக்கு வந்தனர். ஆனால் நான்குபுறம் நீளமான பெஞ்சுகளை வைத்து தடை ஏற்படுத்தி தன்னை அருகில் யாரும் நெருங்க விடாதபடி நடுவில் நின்று கொண்டார் கமல். அவர் அருகில் நின்று புகைப்படம் எடுக்கவும், கைபிடித்து வாழ்த்து சொல்லவும் ஆசைப்பட்டு வந்த ரசிகர்கள், அவரது வணக்கத்தை மட்டும் பார்த்து ஏமாந்து போய், அங்கிருந்து அவமானத்துடன் வெளியேறினர்.
திருப்பதி கோவிலில் கூட சில விநாடிகள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பர். ஆனால், ஒரு விநாடி கூட அனுமதிக்காமல் கமல் முன் நின்றவர்களை இழுத்து விட்டு, மேடையில் நின்ற கட்சி விசுவாசிகள் கடமையை செவ்வனே செய்தனர். இதே கமல்ஹாசன், முந்தைய பிறந்த நாள் விழா ஒன்றில் மேடையில் மிஷ்கின் பாடுவதை, தன் அருகில் நின்றிருக்கும் நடிகை ராதிகா தோள் மீது கைபோட்டு அணைத்தபடி நின்று ரசிக்கிறார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில், மருத்துவமனையில் தரையை சுத்தம் செய்யும் சுகாதார தொழிலாளிக்கு கட்டிப் பிடி வைத்தியம் செய்வார் கமல். ஆனால், நிஜத்தில் தன்னை நேசிக்கும் ரசிகர்களை கூட அருகில் கூட நெருங்க விட மாட்டார் கமல் என்பதுதான் நிஜம். ஆனால் ரஜினி, விஜய் மேடைக்கு வரும் தன் ரசிகர்களிடம் இப்படி தீண்டாமை காட்டாமல், நடந்துக்கொள்வதை பார்த்தாவது, கமல் இனி திருந்த வேண்டும்.
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…