இயக்குனர் அட்லி சல்மான் கானை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் தற்போது கமலஹாசன் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் கமலஹாசன். சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கும் கமலஹாசன் மீண்டும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் ராஜ்கமல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக பல திரைப்படங்களையும் தயாரித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக வலம் வரும் கமலஹாசன் தற்போது அட்லீ இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
![]()
ஏற்கனவே இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி சமீப காலமாக பரவி வந்த நிலையில் தற்போது அது இல்லை என்பது உண்மையாகிவிட்டது. இந்நிலையில் மற்றொரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள். அதாவது அட்லி இயக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லையாம். கமலஹாசன் நடிக்கப் போகிறாராம்.
இயக்குனர் அட்லி அல்லு அர்ஜுனனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அது தற்போது நடக்காத நிலையில் சல்மான் கானை வைத்து அந்த திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இந்த திரைப்படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் மற்றொரு பிரபல நடிகரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி வந்தது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆளாளுக்கு ரஜினிகாந்த் நடித்த போகிறார். கமலஹாசன் நடிக்க போகிறார் என்று கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எது உண்மை என்பது அட்லி கூறினால் தான் தெரியும். மேலும் கமலஹாசனின் மேனேஜர் மகேந்திரன் அட்லிக்கு மிகவும் நெருக்கமான நபர். ஒருவேளை அட்லீ மகேந்திரனிடம் கூறினால் கமலஹாசன் நடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் ஒரு பக்கம் தகவல் வெளியாகி வருகிறது.
