தக்லைஃப் திரைப்படத்தை எடுப்பதற்கு அதிக நாட்களை மணிரத்தினம் எடுத்துக் கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். கடைசியாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயற்றி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு பலரும் முயற்சி செய்து நிலையில் அதனை செய்து காட்டியவர் மணிரத்தினம். இவரது திரைப்படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித ஆர்வம் இருக்கும். ஒரு திரைப்படத்திற்கு மற்றொரு திரைப்படம் அப்படியே வித்தியாசமாக இருக்கும்.
இவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நடிகர் நடிகைகள் ஆசைப்படுவதுண்டு. மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் சிம்பு ஆகிய நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக்லைஃப் . இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷாவும் நடித்து வருகின்றார். ஏகப்பட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக இருவரும் இப்படத்தில் இருந்து விலக பின்னர் அரவிந்த்சாமி படத்தில் நடிப்பார் என்று கூறி வந்தார்கள். அதுவும் இல்லை என்று கடைசியாக சிம்பு மட்டும்தான் இப்படத்தில் இணைந்திருக்கின்றார்.
தக்லைஃப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை எடுப்பதற்கு மணிரத்தினம் 100 நாட்களுக்கு மேல் எடுப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. மணிரத்தினம் ஸ்டைலே ஒரு திரைப்படத்தை 50 முதல் 60 நாட்களில் எடுத்து முடிப்பது தான். எவ்ளோ பெரிய படமாக இருந்தாலும் அதனை விறுவிறுப்பாக எடுத்து முடித்துவிடுவார். ஆனால் இந்த திரைப்படத்திற்கு மட்டும் அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறார்.
அதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிய காரணத்தினால் கதையில் சிறு மாற்றங்களை கொண்டு வர வேண்டி இருக்கின்றது. அதற்காக சிறிது நாட்கள் எடுக்கும் என்பதால் படம் இத்தனை நாள் எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
தற்போது வரை சிம்புவின் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் சிம்புவின் காட்சிகள் தான் அதிகம் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது. கமல் இல்லாத போது சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளும், சிம்பு இல்லாத போது கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.