ரொம்ப சிம்பில் தான்..! தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன கமலஹாசன்….என்ன சொல்லியிருக்காரு பாருங்க!!

By Srimathi on புரட்டாதி 3, 2025

Spread the love

சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், “ராஜ்கமல் இயக்கத்தில் வெளியான அமரன் படத்திற்கும், தெலுங்குவில் நான் அடித்த ஒரு படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. அந்த விருதை பெற்றுக் கொண்டு உடனே நான் மீண்டும் டெல்லிக்கு செல்கிறேன். ஓட்டை காணோம், வாக்காளர் பட்டியலில் பெயரை காணோம். இது தொடர்பாக பெரிய சந்தேகம் எழுந்து உள்ளதால் புகார் செய்து இருக்கிறேன்”.

மேலும் இவரிடம் தெரு நாய்கள் பிரச்சனையை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, “இந்த பிரச்சனைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள், தெரு நாய்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், நமக்காக பொது சுமந்த கழுதையை இப்பொழுது காணவில்லை? யாராவது கவலைப்பட்டீர்களா? கழுதையை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறீர்களா? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும், எவ்வளவு முடியுதோ அவ்வளவு காப்பாற்ற வேண்டும். அதுதான் என்னுடைய கருத்து” என்று கூறினார்.

   

மேலும் பிரதமரின் தாயாரை அவமானப்படுத்தியது குறித்த கேள்விக்கு, “யாரும் யாரையும் அவமானப்படுத்துவது போல் பேச அவசியம் இல்லை” என்று தனது கருத்தை தெரிவித்தார்.